மேலும்

நாள்: 22nd April 2018

லெபனானில் உள்ள 49 சிறிலங்கா படையினரையும் ஆய்வுக்குட்படுத்துமாறு ஐ.நா உத்தரவு

ஐ.நா அமைதிப்படையில் பணியாற்ற லெபனானுக்கு அனுப்பப்பட்ட 49 சிறிலங்கா படையினர் தொடர்பான மனித உரிமை ஆய்வுகளை முன்னுரிமை கொடுத்து உடனடியாக, மேற்கொள்ள வேண்டும் என்று சிறிலங்கா அரசாங்கத்திடம் கோரப்பட்டுள்ளதாக ஐ.நா அமைதிகாப்பு நடவடிக்கை பணியக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

புதிய அமைச்சர்களுக்கான அமைச்சுக்களை ஒதுக்கும் பணிகள் நிறைவு

அமைச்சரவை மாற்றத்தின் போது அமைச்சர்களுக்காக ஒதுக்கப்படும் அமைச்சுக்களை ஒழுங்குபடுத்தும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக சிறிலங்கா அதிபரின் செயலர் ஒஸ்ரின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

இரகசியமாக தரையிறக்கப்பட்ட இராட்சத விமானம் – சந்தேகம் கிளப்பும் பாகிஸ்தான் ஊடகம்

மத்தல விமான நிலையத்தில் மூன்று நாட்கள் தரித்து நின்று விட்டு, நேற்றுமுன்தினம் மாலை புறப்பட்டுச் சென்ற  ரஷ்யாவின் இராட்சத சரக்கு விமானமான அன்ரனோவ்-225, கராச்சியில் தரையிறக்கப்பட்டமை தொடர்பாக பாகிஸ்தான் ஊடகம் ஒன்று சந்தேகம் வெளியிட்டுள்ளது.

அரசியலமைப்பு பேரவை தொடர்ந்து செயற்படும்

சிறிலங்கா நாடாளுமன்றம் முடக்கப்பட்ட போதிலும், அரசியலமைப்பு பேரவை தொடர்ந்து செயற்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

உதயங்கவை சிறிலங்காவுக்கு அனுப்ப மறுக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

மிக் போர் விமானக் கொள்வனவு மோசடி தொடர்பாக தேடப்படும், ரஷ்யாவுக்கான சிறிலங்காவின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை, நாடு கடத்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மறுத்துள்ளது.