மேலும்

நாள்: 10th April 2018

‘அதிபர் தேர்தலில் களமிறங்கத் தயார்’ – கோத்தா

சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடத் தயார் என்றும், அதற்காக அமெரிக்க குடியுரிமையைக் கைவிடுவேன் என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச.

உடன்பாட்டை மீறிய சிறிலங்கா இராணுவம் – கருத்து வெளியிட மறுப்பு

ஐ.நா மற்றும் சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் செய்து கொண்ட உடன்பாட்டை சிறிலங்கா இராணுவம் மீறியுள்ளதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக கருத்து வெளியிட சிறிலங்கா இராணுவம் மறுப்புத் தெரிவித்துள்ளது.

போராட்டத்தில் பங்கேற்கவில்லை – இந்தியா புறப்படுகிறார் முதலமைச்சர் விக்கி

முல்லைத்தீவில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் தொடர்பாக ஆய்வு செய்வதற்கும், அதற்கு எதிராக போராட்டம் நடத்துவதற்கும், வடக்கு மாகாணசபையில் முடிவு செய்யப்பட்டிருந்த போதும், இன்றைய போராட்டங்களில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பங்கேற்கவில்லை.

சிங்களக் குடியேற்றங்களுக்கு எதிராக வடக்கு மாகாணசபையினர் முல்லைத்தீவில் போராட்டம்

முல்லைத்தீவில் இடம்பெற்று வரும்  சிங்களக் குடியேற்றங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் இன்று கண்டனப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

அம்பாந்தோட்டையில் ஜப்பானிய நாசகாரி

ஜப்பானிய கடற்படையின் நாசகாரி போர்க்கப்பலான ‘ஜேஎஸ் அகிபோனோ’, நல்லெண்ணப் பயணமாக அம்பாந்தோட்டைத் துறைமுகத்துக்கு வந்துள்ளது.

முதலமைச்சர் வேட்பாளரை இப்போது தீர்மானிக்க முடியாது – சம்பந்தன்

வடக்கு மாகாண சபைக்கான அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார் என்று இப்போது தீர்மானிக்க முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

வலி.வடக்கில் 683 ஏக்கர் காணிகள் 16ஆம் நாள் விடுவிப்பு – சிறிலங்கா இராணுவம் உறுதி

யாழ்ப்பாண மாவட்டத்தில் சிறிலங்கா இராணுவத்தின் வசமுள்ள 683 ஏக்கர் காணிகள் வரும் 16ஆம் நாள் விடுவிக்கப்படவுள்ளாக, சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.

வன்னியில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு இராணுவப் பயிற்சி

வன்னியில் சிவில் பாதுகாப்புப் படையினால் நடத்தப்படும் முன்பள்ளிகளில் ஆசிரியர்களாகப் பணியாற்றுவோருக்கு 20 நாட்கள் இராணுவப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

கண்டியில் வன்முறைகளில் ஈடுபட்ட இரு சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் கைது

கண்டியில் அண்மையில் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில், சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் இருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

அமைச்சரவைக் கூட்டத்தை புறக்கணிக்க சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் முடிவு

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து அமைச்சர்களும் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தைப் புறக்கணிக்கப் போவதாக முடிவு செய்துள்ளனர்.