மேலும்

நாள்: 11th April 2018

கடைசி நேரத்தில் பிற்போடப்பட்டது சுதந்திரக் கட்சி மத்திய குழுக் கூட்டம்

கொழும்பு அரசியல் அரங்கில் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் கடைசி நேரத்தில் பிற்போடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சர்கள் மீதான மோசடிக் குற்றச்சாட்டு – விசாரிக்குமாறு வடக்கு முதல்வருக்கு ஆளுனர் கடிதம்

வடக்கு மாகாண சபை அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள புதிய மோசடிக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணைகளை நடத்துமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு, வட மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடக்கு முதல்வர் பதவிக்கு டக்ளசும் போட்டி

வடக்கு மாகாண முதலமைச்சர் பதவிக்குப் போட்டியிடுவது குறித்து ஆலோசித்து வருவதாக, ஈபிடிபி செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அமைச்சர் எஸ்.பி வீட்டில் நேற்றிரவு இரகசிய ஆலோசனை

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்றிரவு பத்தரமுல்லையில் உள்ள அமைச்சர் எஸ்.பி.திசநாயக்கவின்  வீட்டில் இரகசியக் கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

வட மாகாணசபை தேர்தலில் புதிய கூட்டணியில் களமிறங்குவேன் – விக்னேஸ்வரன் அதிரடி

வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட வாய்ப்பில்லை என்றும், புதிய கூட்டணி ஒன்றை அமைத்துப் போட்டியிடும் வாய்ப்பு இருப்பதாகவும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கவிஞர் கி.பி.அரவிந்தன் நினைவு இலக்கியப் பரிசு : ‘உலகத் தமிழ்க் குறுநாவல் போட்டி 2018’ – முடிவுகள்

காக்கைச் சிறகினிலே இதழின் தொடக்க நெறியாளராகப் பணியாற்றி மறைந்த கவிஞர் ‘கி பி அரவிந்தன்’ கனவின் மீதியில் எழும் தடமாக இந்தப் போட்டி  அமைகிறது. பாரதி கண்ட “சென்றிடுவீர் எட்டுத் திக்கும், கலைச் செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் !” என்ற கனவை நனவாக்கும் முயற்சிகளில் ஒன்றாகவும் தொடரப்படுகிறது.