வடக்கு ஆளுனராக மீண்டும் ரெஜினோல்ட் குரே
வடக்கு மாகாண ஆளுனராக ரெஜினோல்ட் குரே மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில், அவர் இன்று காலை வடக்கு மாகாண ஆளுனராகப் பொறுப்பேற்றுள்ளார்.
வடக்கு மாகாண ஆளுனராக ரெஜினோல்ட் குரே மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில், அவர் இன்று காலை வடக்கு மாகாண ஆளுனராகப் பொறுப்பேற்றுள்ளார்.
லண்டனில் நடைபெறும் கொமன்வெல்த் தலைவர்களின் உச்சி மாநாட்டில் பங்கேற்க சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அடுத்தவாரம், பிரித்தானியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன், சிறிலங்கா இராணுவம் இன்னமும் புரிந்துணர்வு உடன்பாட்டில் கையெழுத்திடவில்லை என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.
வடக்கில் பெருமளவு தங்கக் கட்டிகள் கைப்பற்றப்பட்டு வரும் நிலையில், இவை விடுதலைப் புலிகளால் புதைத்து வைக்கப்பட்டிருந்த தங்கமாக இருக்கலாம் என்று சிறிலங்கா சுங்கத் திணைகக்களப் பேச்சாளர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
கிளிநொச்சிப் பகுதியில், விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஆறு அமைச்சர்கள் பதவிகளில் இருந்து விலகியதை அடுத்து, அவர்கள் வகித்து வந்த அமைச்சுப் பொறுப்புகளை, அமைச்சரவையில் உள்ள நான்கு அமைச்சர்களிடம் பகிர்ந்து கொடுத்துள்ளார் சிறிலங்கா அதிபர்.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் சிறிலங்கா நாடாளுமன்றம் மே 8ஆம் நாள் வரை முடக்கப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவில் இருந்து நடைமுறைக்கு வரும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.