வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பு
அடுத்து வரும் சில நாட்களில் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட சிறிலங்காவின் பல்வேறு பகுதிகளிலும் கடும் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அடுத்து வரும் சில நாட்களில் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட சிறிலங்காவின் பல்வேறு பகுதிகளிலும் கடும் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தற்போது நடைமுறையில் உள்ள சமூக வலைத்தளங்கள் மீதான கட்டுப்பாடுகளை நீக்குவது தொடர்பாக, அடுத்த இரண்டு நாட்களுக்குள் முடிவெடுக்கப்படும் என்று சிறிலங்காவின் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சர் ஹரின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் உள்ள ஒஸ்ரென்பேர்க் கோட்டையானது வாய்திறந்து பேசுமேயானால், அது தான் இழந்து நிற்கும் தனது புகழைப் பற்றி பெருமையுடன் பேசும். அதாவது இங்கு இடம்பெற்ற போர்கள் மற்றும் இங்கிருந்து சுடப்பட்ட பீரங்கிகள் (கனோன்கள்) போன்றவற்றுக்கு இந்தக் கோட்டை சாட்சியமாக உள்ளது.
அமெரிக்க அரசாங்கத்தின் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட ரஷ்ய நிறுவனத்திடம் இருந்து சிறிலங்கா விமானப்படைக்காக விமானங்கள் கொள்வனவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக, ரிவிர சிங்கள வாரஇதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று மதியம் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, நேற்று இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
அவசரகாலச்சட்டம் நீக்கப்படும் வரையில், சிறிலங்காவில் சமூக வலைத்தளங்கள் மீதான தடை நீடிக்கும் என்று, சிறிலங்கா அரசாங்க வட்டாரங்களை மேற்கொள்காட்டி கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளைத் தூண்டி விட்டவர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து நிதி வழங்கப்பட்டதா என்பது குறித்து விசாரித்து வருவதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.
2020 அதிபர் தேர்தலில் தான் போட்டியிடுவது தொடர்பாக, மகிந்த ராஜபக்சவுடனோ, பசில் ராஜபக்சவுடனோ இன்னமும் பேசவில்லை என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ராஜீவ் காந்தி கொலையாளிகளைத் தானும், தனது சகோதரி பிரியங்காவும் முழுமையாக மன்னித்து விட்டதாக, ராஜீவ் காந்தியின் மகனும், காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.