மேலும்

குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் அரசியல் கைதி ஒருவர் நீதிமன்றினால் விடுதலை

gavelபாகிஸ்தான் தூதுவரை படுகொலை செய்யும் முயற்சியுடன் தொடர்புபட்டவர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒருவரை வழக்கில் இருந்து விடுவிக்க  கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

2006ஆம் ஆண்டு பாகிஸ்தான் தூதுவரைப் படுகொலை செய்ய மேற்கொண்ட முயற்சியுடன் தொடர்புடையவர் என்று முச்சக்கர வண்டி உரிமையாளரான பாலகிருஷ்ணன் பாலசுந்தரம் மனோகரன் என்பவர் கைது செய்யப்பட்டார்.

2016ஆம் ஆண்டு ஓகஸ்ட் 14ஆம் நாள் பாகிஸ்தான் தூதுவரை இலக்கு வைத்து கொள்ளுப்பிட்டியில்  நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலுக்கான முச்சக்கர வண்டியை இவர் வழங்கினார் என்று குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

2012 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 29ஆம் நாள் இவர் வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

பாலகிருஷ்ணன் பாலசுந்தரம் மனோகரன் மீதான குற்றச்சாட்டுகளை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்க அரச சட்டவாளர்கள் தவறி விட்டதால், நேற்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிவான், இவரை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *