மேலும்

சுதந்திர சதுக்கத்தில் 150 சீனர்களுக்கு திருமணம் செய்து வைக்கிறார் சிறிலங்கா அதிபர்

mass-weddingசீன நாட்டவர்கள் 150 பேருக்கு கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்தில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் திருமணம் நடைபெறவுள்ளது. கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.

சுதந்திர சதுக்கத்தில் வரும் டிசெம்பர் 17ஆம் நாள் இந்த பாரிய திருமண நிகழ்வு நடைபெறவுள்ளது.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகப் பங்கேற்று, 75 சீன திருமண இணையர்களுக்கும், திருமணச் சான்றிதழ்களை வழங்குவார்.

திருமணம் முடிந்த பின்னர், அன்றிரவு பத்தரமுல்ல -வோட்டர் எட்ஜ் விடுதியில் இராப்போசன விருந்து இடம்பெறும்.

மறுநாள், மூன்று குழுக்களாக சீன இணையர்கள், யால, சிகிரியா, கண்டி ஆகிய இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவர்.

சிறிலங்காவின் பெருநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சு,பீஜிங்கில் உள்ள சிறிலங்கா தூதரகம், சுற்றுலாத்துறை அமைச்சு ஆகியன இணைந்து இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *