மேலும்

சீன அதிபருக்கு சிறிலங்கா பிரதமர் வாழ்த்து

Xi-Ranil (1)சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலராகவும்,  இராணுவ ஆணைக்குழுவின் தலைவராகவும் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ள சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

“பரஸ்பர மரியாதை,  நம்பிக்கை ஒற்றுமை, புரிந்துணர்வு ஆகியவற்றின் மீது பல பத்தாண்டுகளாக கட்டியெழுப்பப்பட்ட சீன- சிறிலங்கா நீண்டகால நட்புறவினால், சோதனையான தருணங்களிலும், இரு நாடுகளும், புதிய வரலாற்று மைல்கல்லை எட்ட உதவியுள்ளது.

உங்களின் இரண்டாவது பதவிக்காலத்தில்,  எமது இரண்டு நாடுகளினதும் மக்களுக்கும் நன்மையளிக்கக் கூடிய வகையில், நெருக்கமான நட்புறவும், ஒத்துழைப்பும்  தொடர்ந்து மேலும் விரிவடையும் என்பது எனது நம்பிக்கை.

உங்கள் ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் தனிப்பட்ட நல்வாழ்வு மற்றும் சீன குடியரசின் மக்களுடைய தொடர்ச்சியான முன்னேற்றம் மற்றும் செழிப்பு ஆகியவற்றிற்காக எனது வாழ்த்துக்களை ஏற்றுக் கொள்ளுங்கள்” என்றும் சிறிலங்கா பிரதமர் வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *