மேலும்

கொழும்பு துறைமுகத்தில் தென்கொரிய நாசகாரி போர்க்கப்பல்

Korean Navy shipsதென்கொரியக் கடற்படையின் நாசகாரி போர்க்கப்பல் ஒன்று, எண்ணெய் விநியோக துணைக்கப்பலுடன் நேற்றுமுன்தினம் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

தென்கொரிய கடற்படையின் நாசகாரி கப்பலான, காங் காம் சான், எரிபொருள் விநியோக துணைக் கப்பலான, ஹவாசியோனுடன் இணைந்து நான்கு நாட்கள் நல்லெண்ணப் பயணமாக கொழும்பு வந்துள்ளது. இவற்றில் 630 மாலுமிகள் உள்ளனர்.

சிறிலங்கா கடற்படையினர் இந்தப் போர்க்கப்பல்களுக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்துள்ளனர்.

Korean Navy ships

நாளை இந்தப் போர்க்கப்பல்கள் கொழும்பில் இருந்து புறப்பட்டுச் செல்லவுள்ளன. சிறிலங்காவில், தங்கியிருக்கும் போது, தென்கொரிய கடற்படையினர் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளதாக தென்கொரிய தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்திய ஆய்வுக் கப்பலும் கொழும்பில்

அதேவேளை, இந்தியக் கடற்படையின் ஐஎன்ஸ்எஸ் சுற்லேஜ் என்ற ஆய்வுக் கப்பலும் நேற்று முன்தினம் கொழும்பு வந்துள்ளது.

சிறிலங்கா கடற்படையினருடன் இணைந்து சமுத்திரவியல் ஆய்வை மேற்கொள்வதற்காக, இந்தக் கப்பல் கொழும்பு வந்துள்ளது.

INS Sutlej

ஐஎன்ஸ்எஸ் சுற்லேஜ் டிசெம்பர் 21ஆம் நாள் வரை சிறிலங்கா கடற்பரப்பில் தங்கியிருந்து ஆய்வுகளை மேற்கொள்ளும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *