மேலும்

கண்டி நகரிலுள்ள சிறிலங்கா இராணுவ முகாமை அகற்றுவதற்கு அஸ்கிரிய பீடம் எதிர்ப்பு

champika-asgiriyaகண்டி நகரத்தில் உள்ள சிறிலங்கா இராணுவத்தின் சிங்க ரெஜிமென்ட்டின் முகாமை அகற்றுவதற்கு அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கரும், பௌத்த பிக்குகளும் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.

அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கரை நேற்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க சந்தித்துப் பேசிய போதே, கண்டி நகரில் உள்ள சிறிலங்கா இராணுவ முகாமை அகற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யட்டிநுவர வீதியில் உள்ள சிங்க ரெஜிமென்ட் முகாமை அகற்றுவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள முடிவுக்கு மகாநாயக்கரும்,  காரக்க சங்க சபாவின் உறுப்பினர்களான பௌத்த பிக்குகளும் சம்பிக்க ரணவக்கவிடம் எதிர்ப்பை வெளியிட்டனர்.

champika-asgiriya

புனித நகரத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு இந்த இராணுவ முகாம் அவசியம் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தமது அமைச்சு இந்த இராணுவ முகாமை அகற்றக் கோரவில்லை என்றும், இராணுவத்தினர் ஆக்கிரமித்தள்ள 20 பேர்ச் காணிகளை ஒப்படைக்குமாறே இராணுவத் தலைமையகத்திடம் கோரியதாகவும் அதற்கு இராணுவத் தலைமையகத்தினால் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *