மேலும்

நல்லூர் துப்பாக்கிச் சூடு- சரணடைந்த பிரதான சந்தேகநபருக்கு விளக்கமறியல்

CCTV-footageயாழ். மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தொடர்பாக கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்க யாழ். நீதிமன்ற நீதிவான் சதீஸ்கரன் உத்தரவிட்டுள்ளார்.

நல்லூரில் கடந்த சனிக்கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டில், நீதிபதி இளஞ்செழியனின் பாதுகாப்பு அதிகாரியான உதவி ஆய்வாளர் சரத் பிறேமச்சந்திர மரணமானார். மற்றொரு காவலர் காயமடைந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த செல்வராசா ஜெயந்தன் நேற்றுக்காலை யாழ். காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

nallur-shotசரணடைந்த பிரதான சந்தேக நபரான ஜெயந்தன், நீதிபதியைக் கொலை செய்யும் நோக்கம் தமக்கு இருக்கவில்லை என்று விசாரணையாளர்களிடம் தெரிவித்துள்ளார். மதுபோதையில் முச்சக்கரவண்டி சாரதிகள் சிலருடன் தாம் வாக்குவாதப்பட்டுக் கொண்டிருந்த போது, நீதிபதியின் பாதுகாவலரான சரத் பிறேமச்சந்திர வந்து தலையிட்டு அதனை தீர்த்து வைக்க முயன்றதாகவும், அப்போது, அவருடன் முரண்பாடு ஏற்பட்டு அவரது கைத்துப்பாக்கியை உருவிச் சுட்டதாகவும் கூறியுள்ளார்.

அவரிடம் விசாரணை நடத்திய காவல்துறையினர் மாலையில், யாழ். நீதிமன்ற நீதிவான் சதீஸ்கரனின் இல்லத்தில் அவரை முன்னிலைப்படுத்தினர். அப்போது எதிர்வரும் ஓகஸ்ட் 8ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.

இவர் ஏற்கனவே 2012ஆம் ஆண்டு நடந்த கொலை ஒன்று தொடர்பாக கைது செய்யப்பட்டு பிணையில் வெளிவந்தவராவார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *