மேலும்

விக்கியிடம் இருந்து சாதகமான பதில் கிடைக்கவில்லை – சுமந்திரன்

sumanthiranவடக்கு அரசியலில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், நேற்று மாலை வரையில் சாதகமான எந்த பதிலும், முதலமைச்சரிடம் இருந்து கிடைக்கவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கு கருதது வெளியிட்டுள்ள அவர்,

‘அமைச்சர்கள் இரண்டு பேரை ஒருமாத கட்டாய விடுப்பில் அனுப்பும் முடிவை முதலமைச்சர் கைவிட வேண்டும்.

ஆனால் முதலமைச்சரிடம் இருந்து நேற்று மாலை வரையில் சாதகமான எந்தப் பதிலும் கிடைக்கவில்லை.

முதலமைச்சருக்கு எதிராக தமிழ் அரசுக் கட்சி உறுப்பினர்களால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை விலக்கிக் கொண்டு, சமரசத்துக்கு நாம் தயாராகவே இருக்கிறோம்.

ஆனால் அது எமக்கு அளிக்கப்படும் பதிலிலேயே தங்கியுள்ளது.” என்று அவர் கூறியுள்ளார்.

2 கருத்துகள் “விக்கியிடம் இருந்து சாதகமான பதில் கிடைக்கவில்லை – சுமந்திரன்”

  1. மகேந்திரன் says:

    திரு:சுமந்திரன் அவர்களே நீதிமான் அவர்களிடம் என்ன பதில் தேவை மக்களே உங்களுக்கு பதில் தகுந்த பதிலை தந்து விட்டார்களே

  2. RAMSARMA says:

    any reason don’t allowed cvk on the power in north provincial chair(chief minister) thxs pl .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *