மேலும்

Tag Archives: தயாசிறி ஜெயசேகர

அடுத்த ஆண்டு ஜூன் வரை அதிபர் பதவியைத் தக்கவைக்கும் முயற்சியில் மைத்திரி

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தனது பதவிக்காலம் எப்போது முடிவடைகிறது என்று உச்சநீதிமன்றத்திடம் விளக்கம் கோரவுள்ளார் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.

தயாசிறி ஜெயசேகரவுக்கு மாரடைப்பு – கொழும்பு மருத்துவமனையில் சிகிச்சை

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலரும் நாடாளுமன்ற உறுப்பினருமான, தயாசிறி ஜெயசேகரவுக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மைத்திரி – மகிந்த தலைமையில் புதிய கூட்டணி

சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் சிறிலங்கா பொதுஜன முன்னணியை உள்ளடக்கிய பாரிய கூட்டணி ஒன்றை அமைப்பது குறித்து இரண்டு கட்சிகளுக்கும் இடையில் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன.

சிங்கப்பூரில் இருந்து திரும்பியதும் தாய்லாந்து கிளம்புகிறார் சிறிசேன

சிங்கப்பூருக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அடுத்து தாய்லாந்துக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளார் என்று அதிபர் செயலக வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

கட்சித் தலைவர்களுக்கு மைத்திரி வாக்குறுதி கொடுக்கவில்லையாம்

நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்புக்கு இடையூறு ஏற்படுத்துவதற்கு அனுமதி அளிக்கமாட்டேன் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கட்சித் தலைவர்களுக்கு வாக்குறுதி எதையும் கொடுக்கவில்லை என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.

தயாசிறியிடம் ஐந்தரை மணிநேரம் விசாரணை

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகரவிடம், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று ஐந்தரை மணிநேரம் விசாரணை நடத்தினர்.

அர்ஜூன் அலோசியசிடம் 10 மில்லியன் ரூபா பெற்றதை ஒப்புக்கொண்டார் தயாசிறி

மத்திய வங்கி பிணைமுறி மோசடிக் குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அர்ஜூன் அலோசியசின் வோல்ட் அன் றோ அசோசியேட்ஸ் நிறுவனத்திடம் இருந்து  தாம் 10 மில்லியன் ரூபாவைப் பெற்றதாக ஒப்புக்கொண்டுள்ளார் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர.

நம்பிக்கையில்லா பிரேணையை மீளப்பெறுமாறு சிறிலங்கா பிரதமர் உத்தரவு

சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் ஆறு பேர் மற்றும் பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால ஆகியோருக்கு எதிராக, ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர்களால் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையை மீளப் பெறுமாறு சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவுறுத்தியுள்ளார்.

சுதந்திரக் கட்சியினர் 22 பேர் கூட்டு அரசில் இருந்து வெளியேறுகின்றனர்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்புக்குப் பின்னர், சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 22 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இருந்து விலகவுள்ளனர்.

அமைதியாக நடந்த அமைச்சரவைக் கூட்டம் – இரண்டு அமைச்சர்கள் புறக்கணிப்பு

உள்ளூராட்சித் தேர்தலை அடுத்து ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்குப் பின்னர், சிறிலங்கா அமைச்சரவைக் கூட்டம் இன்று அமைதியான முறையில் இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.