மேலும்

சீனா சென்றடைந்தார் சிறிலங்கா பிரதமர்

ranil-chinaசீனாவின் பீஜிங் நகரில் நடைபெறவுள்ள ஒரு பாதை ஒரு அணை உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட அவர், இன்று பிற்பகல் பீஜிங் நகரைச் சென்றடைந்தார்.

அவர் முப்பது நாடுகளின் தலைவர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான வெளிநாட்டுப் பிரதிநிதிகள் பங்கேற்கும் இரண்டு நாட்கள் நடைபெறும், ஒருபாதை ஒரு அணை உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளார்.

சிறிலங்கா பிரதமருடன் அமைச்சர்கள் சரத் அமுனுகம, ரவூப்  ஹக்கீம், சாகல ரத்நாயக்க, மலிக் சமரவிக்கிரம, மற்றும் அதிகாரிகள் பீஜிங் சென்றுள்ளனர்.

ranil-china

ஐந்து நாட்கள் சீனாவில் தங்கியிருக்கும் சிறிலங்கா பிரதமர், சீன அதிபர் ஷி ஜின்பிங் உள்ளிட்ட உயர்மட்டத் தலைவர்களைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.

அத்துடன் உடன்பாடும் இந்தப் பயணத்தின் போது சிறிலங்கா- சீனாவுக்கு இடையில் பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு உடன்பாடும் கையெழுத்திடப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *