மேலும்

மாதம்: April 2017

இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு உடன்பாட்டுக்கு தயாராகிறது சிறிலங்கா

இந்தியாவுடன் பொருளாதாரத் திட்டங்கள் ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு உடன்பாடு ஒன்றில் சிறிலங்கா இந்த ஆண்டில் கையெழுத்திடவுள்ளது.

கொழும்பில் இன்று ஆரம்பமாகிறது இரண்டு நாள் பாதுகாப்புக் கருத்தரங்கு

தீவிரவாதத்தை தடுத்தல் மற்றும் தெற்காசியாவில் வன்முறை அடிப்படைவாதத்தை எதிர்த்தல் என்ற தொனிப்பொருளில் இரண்டு நாள் பாதுகாப்புக் கருத்தரங்கு ஒன்று கொழும்பில் இன்று ஆரம்பமாகவுள்ளது.

சீனாவுடனான நட்பினால் இந்தியாவை இழக்கமாட்டோம் – சிறிலங்கா பிரதமர்

சீனாவுடனான சிறிலங்காவின் நட்பு, இந்தியாவை இழக்கச் செய்து விடாது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்திய தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவுக்கு 3000 மெட்றிக் தொன் அரிசியுடன் 3 கப்பல்களை அனுப்பியது பாகிஸ்தான்

வரட்சியால் பாதிக்கப்பட்ட சிறிலங்காவுக்கு பாகிஸ்தான் வழங்கியுள்ள 3000 மெட்றிக் தொன் அரிசியை ஏற்றிக் கொண்டு மூன்று கப்பல்கள் கொழும்பு நோக்கிப் புறப்பட்டுள்ளன. சிறிலங்காவில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தின் அடையாளச் சின்னமான யாழ் இசைக்கருவிகள் யாழ்ப்பாணத்துக்குக் கிடைத்தன

யாழ்ப்பாணத்தின் அடையாளச் சின்னமாகிய யாழ் இசைக்கருவிகள் இரண்டு புலம் பெயர் தமிழர் ஒருவரால், யாழ். பொது நூலகத்துக்கும், யாழ்.பல்கலைக்கழகத்துக்கும் வழங்கப்பட்டுள்ளன.

சிறிலங்கா வாக்குறுதிகளை நிறைவேற்றினால் மேலதிக இராணுவ ஒத்துழைப்பு – அமெரிக்கா

அமெரிக்க- சிறிலங்கா நாடுகளுக்கிடையிலான இராணுவ ஒத்துழைப்பு அதிகரித்து வருவதானது, நல்லிணக்கம் மற்றும் நீதி செயல்முறைகளில் சிறிலங்காவின் முன்னேற்றத்தைப் பிரதிபலிப்பதாக சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப் தெரிவித்துள்ளார்.

200 சிறிலங்கா படையினர் அடுத்த வாரம் மாலி செல்கின்றனர்

மேற்கு ஆபிரிக்க நாடான மாலியில் ஐ.நா அமைதிப்படையில் இணைந்து கொள்வதற்காக 200 சிறிலங்கா இராணுவத்தினர் அடுத்த மாதம், கொழும்பில் இருந்து புறப்படவுள்ளனர்.

ஒரே நாளில் மாகாணசபை தேர்தல் – சிறிலங்கா அதிபரின் யோசனை முதலமைச்சர்களால் நிராகரிப்பு

அனைத்து மாகாணசபைகளுக்குமான தேர்தலை ஒரே நாளில் நடத்துவது தொடர்பாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்வைத்த யோசனையை, மாகாண முதலமைச்சர்கள் நிராகரித்துள்ளனர்.

அமைச்சுக்கள் தொடர்பில் இணக்கமில்லை – அமைச்சரவை மாற்றம் மீண்டும் ஒத்திவைப்பு

சிறிலங்காவின் கூட்டு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஐதேகவுக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் இணக்கப்பாடு ஏற்படுவதில் இழுபறிகள் காணப்படுவதால் அமைச்சரவை மாற்றம் மீண்டும் காலவரையின்றி பிற்போடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பு நிதி நகரத் திட்டத்தை இந்தியா எதிர்க்கவில்லை – சீன நிறுவனம்

தெற்காசியாவில் மிகவும் பொருத்தமான வணிகக் கேந்திரமாக சிறிலங்கா தலைநகர் கொழும்பு  விளங்குவதாக கொழும்பு நிதிநகரத் திட்டத்தின் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரியான லியாங் தௌ மிங் தெரிவித்துள்ளார்.