மேலும்

ஒட்டாவா உடன்பாட்டில் சிறிலங்காவை கையெழுத்திடக் கோருகிறது பிரித்தானியா

Progress-Reports-ukகண்ணிவெடிகளைத் தடை செய்யும் ஒட்டாவா உடன்பாட்டில் சிறிலங்கா கையெழுத்திட வேண்டும் என்று பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது.

சிறிலங்காவில் கண்ணிவெடிகளை அகற்றும் செயற்பாடுகளுக்கு பிரித்தானியா உதவி வழங்கி வருகிறது. 2010 ஆம் ஆண்டு தொடக்கம் 2019ஆம் ஆண்டு வரையான காலத்தில் சிறிலங்காவில் கண்ணிவெடிகளை அகற்றும் நடவடிக்கைகளுக்கு 1.2 பில்லியன் ரூபாவை பிரித்தானியா செலவிடுகிறது.

2016 தொடக்கம் 2019 வரையான காலப்பகுதியில் மேலும் 600 சதுர கி.மீ பரப்பளவு நிலத்தில் கண்ணிவெடிகளை அகற்றி மக்கள் தமது சொந்த வீடுகளுக்குத் திரும்பவும், விவசாயத்தை மேற்கொள்ளவும் பிரித்தானியா உதவும் என்று சிறிலங்காவுக்கான பிரித்தானிய துணை தூதுவர் லோறா டேவிஸ் தெரிவித்துள்ளார்.

Progress-Reports-uk

2020 ஆம் ஆண்டில் கண்ணிவெடிகளில் இருந்து விடுவிக்கப்பட்ட நாடாக மாற்றும் இலக்குடன் சிறிலங்கா செயற்படுகிறது. இந்த இலக்கை எட்டுவதற்கான சிறிலங்காவின் ஒவ்வொரு நகர்வுகளிலும் பிரித்தானியா ஆதரவை அளிக்கும்.

அத்துடன் ஒட்டாவா உடன்பாட்டிலும் சிறிலங்கா கையெழுத்திட வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *