மேலும்

சம்பந்தனைச் சந்தித்துப் பேசினார் ஜேர்மனி நாடாளுமன்றத் தலைவர்

sampanthan -germany parliament (1)சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஜேர்மனி நாடாளுமன்றத் தலைவர் பேராசிரியர் கலாநிதி லம்மேர்ட், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

இந்தச் சந்திப்பு சிறிலங்கா நாடாளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அதிகாரபூர்வ செயலகத்தில் நேற்றுக்காலை இடம்பெற்றது.

சுமார் ஒரு மணிநேரம் இடம்பெற்ற இந்தச் சந்திப்பின் போது புதிய அரசியலமைப்பு உருவாக்கம், நல்லிணக்க முயற்சிகள் மற்றும் பல்வேறு விவகாரங்கள் குறித்துப் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன.

sampanthan -germany parliament (1)sampanthan -germany parliament (2)

சிறுபான்மையின மக்களின் நலன்களை வென்றெடுப்பதற்கு அனைத்துலக சமூகத்தின் பங்களிப்பு தொடரப்பட வேண்டியது அவசியம் என்று இந்தச் சந்திப்பின் போது இரா. சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *