மேலும்

மாதம்: June 2016

சிங்கப்பூருக்குள் நுழைய விடாமல் திருப்பி அனுப்பப்பட்டார் மகிந்தவின் பேச்சாளர்

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளர் ரொகான் வெலிவிட்டவை, சிங்கப்பூர் அரசாங்கம் நாடு கடத்தியுள்ளது. 

கிழக்கு முதல்வரை விருந்துக்கு அழைத்த சிறிலங்கா கடற்படை

திருகோணமலைக் கடற்படைத் தளத்தில் நேற்று நடந்த மதியபோசன விருந்தில், கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அகமட் கலந்து கொண்டார்.

மகிந்தவின் இராணுவப் பாதுகாப்பு இன்றுடன் முற்றாக நீக்கம்

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு, வழங்கப்பட்டிருந்த இராணுவப் பாதுகாப்பு இன்றுடன் முழுமையாக நீக்கப்படவுள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.

8 முன்னாள் விடுதலைப் புலிகள் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுதலை

விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் எட்டுப் பேர், நேற்று கொழும்பு மேலதிக நீதிவான் அருணி ஆட்டிக்கலவினால், குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.

மோடி வாக்குறுதி அளித்தபோதும் இன்னமும் பேச்சுக்கள் தொடங்கவில்லை

சம்பூரில் திரவ இயற்கை எரிவாயு அனல் மின் நிலையத்தை அமைப்பது தொடர்பாக இதுவரை இந்திய- சிறிலங்கா அரசாங்கங்களுக்கு இடையில் எந்தப் பேச்சுக்களும் ஆரம்பிக்கப்படவில்லை என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

வடக்கில் சிங்களவர்கள், முஸ்லிம்களை மீள்குடியேற்றுவதற்கு அமைச்சர்கள் மட்டக்குழு

வடக்கில் சிங்களவர்கள் மற்றும் முஸ்லிம்களை மீளக்குடியமர்த்துவது தொடர்பாக, அமைச்சர்கள் குழுவொன்றை அமைக்க, சிறிலங்கா அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

காணாமற்போனோர் குறித்த 3000 முறைப்பாடுகளை குப்பைக்குள் வீசியது பரணகம ஆணைக்குழு

காணாமற்போனோர் தொடர்பாக தமது ஆணைக்குழுவுக்குச் சமர்ப்பிக்கப்பட்ட 3000 முறைப்பாடுகள், ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் பதிவு செய்யப்பட்டவை என்று கண்டறியப்பட்டுள்ளதாக, ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார்.

400 மில்லியன் டொலர் செலவில் போர் விமானங்கள் எதற்கு? – திஸ்ஸ விதாரண கேள்வி

சிறிலங்கா விமானப்படைக்கு, எதற்காக 400 மில்லியன் டோலர் செலவில் போர் விமானங்களை வாங்க வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார், முன்னாள் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண.

வெளிநாடுகளில் புகலிடம் தேடியோருக்கு சிறிலங்கா கடவுச்சீட்டு – மகிந்த விதித்த தடை நீக்கம்

அரசியல் அழுத்தங்களால் வெளிநாடுகளில் புகலிடம் கோரிய இலங்கையர்களுக்கு, சிறிலங்கா கடவுச்சீட்டுகளை வழங்க, விதிக்கப்பட்டிருந்த தடையை சிறிலங்கா அரசாங்கம் நீக்கியுள்ளது.

சிறிலங்கா அதிபர் பங்கேற்ற நட்சத்திர விடுதி திறப்பு விழாவில் தீவிபத்து

அம்பாந்தோட்டையில் நேற்று மாலை சிறிலங்கா அதிபரால் திறந்து வைக்கப்பட்ட சங்கிரி-லா நட்சத்திர விடுதியில் நடந்த கலை நிகழ்வுகளின் போது, தீவிபத்து ஏற்பட்டது.