மேலும்

400 மில்லியன் டொலர் செலவில் போர் விமானங்கள் எதற்கு? – திஸ்ஸ விதாரண கேள்வி

tissa vitharanaசிறிலங்கா விமானப்படைக்கு, எதற்காக 400 மில்லியன் டோலர் செலவில் போர் விமானங்களை வாங்க வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார், முன்னாள் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண.

கொழும்பில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,

“சிறிலங்கா அரசாங்கம், அனைத்துலக நாணய நிதியத்திடம் இருந்து, 1500 மில்லியன் டொலரை கடனாகப் பெறவுள்ளது.

அந்த நிதியைப் பயன்படுத்தி, 400 மில்லியன் டொலருக்கு, போர் விமானங்கள் வாங்கப்படவுள்ளன.

மில்லியன் கணக்கான டொலர்களை செலவிட்டு போர் விமானங்களை வாங்குவதற்கு, நாட்டில் இன்னமும் போர் நடந்து கொண்டிருக்கிறதா?

சிறிலங்காவுக்கு வெளிநாட்டு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏதும் இருக்கிறதா?

அமெரிக்க கடற்படையின், ஏழாவது கப்பற்படைப் பிரிவு, திருகோணமலைத் துறைமுகத்தை தமது தளமாகப் பயன்படுத்தவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிப்பதாகவும், அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *