மேலும்

அமெரிக்க அதிபர் தேர்தல் – வேட்பாளர் தேர்தலில் ஹிலாரி கிளின்டன் வெற்றி

Hillary Clintonஅமெரிக்காவில் வரும் நொவம்பர் மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்டன் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்பது உறுதியாகியுள்ளது.

ஜனநாயக் கட்சியின் அதிபர் தேர்தல் வேட்பாளரைத் தெரிவு செய்வதற்காக நடந்த தேர்தலில், அந்தக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிடுவதற்குத் தேவையான 2383 பிரதிநிதிகள் வாக்குகளை, ஹிலாரி கிளின்டன் நேற்று பெற்று விட்டதாக ஏபி செய்தி வெளியிட்டுள்ளது.

இதையடுத்து. அவர், ஏற்கனவே, குடியரசுக் கட்சியின் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்புடன், அதிபர் தேர்தலில் மோதவுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல், வரும் நொவம்பர் 4ஆம் நாள் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *