மகிந்த சமரசிங்க பதவி விலகுவதாக அறிவிப்பு
அமெரிக்கா மற்றும் மெக்சிகோவுக்கான சிறிலங்கா தூதுவர் பதவியில் இருந்து விலகுவதாக, மகிந்த சமரசிங்க, அரசாங்கத்திற்கு அதிகாரப்பூர்வமாகத் அறிவித்துள்ளார் என சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்கா மற்றும் மெக்சிகோவுக்கான சிறிலங்கா தூதுவர் பதவியில் இருந்து விலகுவதாக, மகிந்த சமரசிங்க, அரசாங்கத்திற்கு அதிகாரப்பூர்வமாகத் அறிவித்துள்ளார் என சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலர் கலாநிதி போல் கபூரை, அமெரிக்காவுக்கான சிறிலங்கா தூதுவர் மகிந்த சமரசிங்க சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் உள்ளிட்ட மூன்று பேர் சிறிலங்கா அரசாங்கத்தின் தரப்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் பங்கேற்கவுள்ளதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பான இழுபறிக்கு இன்னமும் முடிவு காணப்படாத நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் செயலகம் இன்னமும், இரா.சம்பந்தனின் பொறுப்பிலேயே இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேற்குலக நாடுகளின் இராஜதந்திரிகளுடன், இரகசியப் பேச்சுக்களை நடத்திய சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் சிறிலங்கா பொதுஜன முன்னணி குழுவினர் பற்றிய விபரங்கள் வெளியாகியுள்ளன. நான்கு பேர் கொண்ட, அரச தரப்புக் குழுவே கடந்த செவ்வாய்க்கிழமை இந்த இரகசிய சந்திப்பை நடத்தியிருந்தது.
மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லை என்பதை வெளிப்படுத்தி, 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட பிரேரணையை ஆராய்ந்த பின்னர், அடுத்த கட்டம் குறித்து சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முடிவெடுப்பார் என்று அமைச்சரவைப் பேச்சாளர் மகிந்த சமரசிங்க தெரிவித்தார்.
பெரும்பான்மையை நிரூபிக்காத வரை- மகிந்த ராஜபக்சவை பிரதமராக ஏற்க முடியாது என்று சபாநாயகர் கரு ஜெயசூரிய வெளியிட்ட அறிக்கை, மைத்திரி- மகிந்த அரசாங்கத்துக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், சபாநாயகருக்கு அரசாங்கத்தின் பங்காளிகள், பகிரங்க எச்சரிக்கைகளை விடுத்துள்ளனர்.
சிறிலங்காவின் துறைமுக துறையை அபிவிருத்தி செய்வதற்கான தொழில்நுட்ப உதவிகளைப் பெற்றுக் கொள்வது தொடர்பாக, சீனாவுடன் பேச்சு நடத்தப்பட்டுள்ளது.
சிறிலங்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான நடைமுறை ஒத்துழைப்பு கடந்த ஆண்டில் துரிதமாக வளர்ச்சியடைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார், சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் செங் ஷியுவான்.
சிறிலங்காவின் எந்தவொரு துறைமுகத்தையும், எந்தவொரு வெளிநாட்டுக்கும் விற்கும் அல்லது கைமாற்றம் செய்யும் எண்ணம் அரசாங்கத்துக்கு இல்லை என்று சிறிலங்காவின் துறைமுகங்கள், கப்பல்துறை அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.