மேலும்

பலாலியில் அனைத்துலக விமான நிலையம் – மாவையிடம் திட்ட முன்மொழிவு

mavai-senathirajahபலாலி விமான நிலையத்தை அனைத்துலக விமான நிலையமாக விரிவாக்கும் திட்டம் தொடர்பான முன்மொழிவுகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

பலாலி விமான நிலையத்தை அனைத்துலக விமான நிலையமாக அபிவிருத்தி செய்வதற்கு, சிறிலங்கா அதிபர், பிரதமர் மற்றும் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க ஆகியோர் இணங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, அனைத்துலக விமான நிலையமாக இதனை அபிவிருத்தி செய்யும் போது, ஓடுபாதை விரிவாக்கம் உள்ளிட்ட தேவைகளுக்கு காணிகள் தேவைப்படும் என்றும், எனினும், அத்தகைய பொதுமக்களின் காணிகளை அதற்காக சுவீகரிப்பதில்லை என்று தீர்மானித்துள்ளதாகவும் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

அதற்குப் பதிலாக, கடற்கரையோரத்தில் மண்ணை நிரப்பி, தேவையான நிலத்தைப் பெற்றுக் கொள்ளும் யோசனை முன்மொழியப்பட்டுள்ளதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

பலாலியில் அனைத்துலக விமான நிலையத்தை அமைக்கும் திட்ட முன்மொழிவுகள் தன்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், அது குறித்து ஆராந்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஒரு கருத்து “பலாலியில் அனைத்துலக விமான நிலையம் – மாவையிடம் திட்ட முன்மொழிவு”

  1. மனோ says:

    புது வருட வாணவேடிக்கை இதுவோ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *