மேலும்

பிரகீத் கடத்தலுடன் தொடர்புடைய மேஜர் உள்ளிட்ட மேலும் இரு புலனாய்வு அதிகாரிகள் கைது

prageeth eknaligodaஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்டது தொடர்பாக சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த மேஜர் ஒருவர் உள்ளிட்ட மேலும் இரண்டு அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்ட இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் இருவரும், நேற்று ஹோமகம நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதனையடுத்து, அவர்களை வரும் 17ஆம் நாள் வரை தடுத்து வைத்து விசாரிக்க ஹோமகம நீதிவான் அனுமதி அளித்துள்ளார்.

அதேவேளை, இவர்கள் இருவரையும் சிறைச்சாலை மருத்துவமனையில் முழுமையான மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறும், நீதிவான் உத்தரவிட்டார்.

இதனிடையே, குற்றப்புலனாய்வுப் பிரிவினரால், ஏற்கனவே கைது செய்யப்பட்ட மூன்று இராணுவப் புலனாய்வு அதிகாரிகளும், நேற்று ஹொமகம நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்.

அவர்களையும் எதிர்வரும் 17ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

இராணுவப் புலனாய்வு அதிகாரிகளின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள், தமது கட்சிக்காரர்களுக்கு சிறைச்சாலையில் சிறப்பு பாதகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இதற்கு நீதிவான், சிறையில் சிறப்பு  பாதுகாப்பு வழங்குவது குறித்து சிறைச்சாலைக் கண்காணிப்பாளருக்கு உத்தரவிடுவது பற்றிய கோரிக்கை தொடர்பாக ஆராயப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *