மேலும்

சிறிலங்காவின் பெயரையும், தேசியக் கொடியையும் மாற்றப் போகிறதாம் பிஜேபி

bjpசிறிலங்காவின் பெயரையும், தேசியக் கொடியையும் மாற்றியமைப்பதற்கு தாம் நடவடிக்கை எடுப்போம் என்று பொது பல சேனாவின் அரசியல் கட்சியான பொது ஜன பெரமுன (பிஜேபி) உறுதி அளித்துள்ளது.

நாகபாம்பு சின்னத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் 17 மாவட்டங்களில் போட்டியிடும் பிஜேபி, கடந்த சில நூற்றாண்டுகளாக சிங்களவர்களுக்கும், பௌத்த சாசனத்துக்கும் எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை மாற்றியமைப்பதே தமது முதன்மையான நோக்கம் என்று தெரிவித்துள்ளது.

நாட்டின் பெயர், 1815ஆம் ஆண்டுக்கு முன்னர் இருந்தது போல, சிங்ஹலே என்று மாற்றப்பட வேண்டும்.

bjp

அதுபோல, தேசியக்கொடியையும் முன்பிருந்தது போலவே சிங்கக்கொடியாக மாற்றியமைக்கப்பட வேண்டும் என்றும் பிஜேபி தெரிவித்துள்ளது.

கம்பகா மாவட்ட தேர்தல் பரப்புரைகளை களனியில் ஆரம்பித்து வைக்கப்பட்ட போதே பிஜேபியின் இந்தக் கருத்துகள் வெளியிடப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *