மேலும்

சிறிலங்காவில் உயிரிழந்த இந்திய அமைதிப்படையினருக்கு பலாலியில் புதிய நினைவுத் தூபி

IPKF-memorial-palaly (1)சிறிலங்காவில் உயிரிழந்த இந்திய அமைதிப்படையினரை நினைவு கூரும் நிகழ்வு பலாலிப் படைத்தளத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இந்திய அமைதிப்படையினருக்கான நினைவிடத்தில் நேற்று நடைபெற்றது.

1987 ஜூலைக்கும், 1990 மார்ச்சுக்கும் இடைப்பட்ட காலத்தில் சிறிலங்காவில் பணியாற்றிய போது, விடுதலைப் புலிகளுடன் நடந்த போரில் கொல்லப்பட்ட இந்தியப் படையினரே நினைவு கூரப்பட்டுள்ளனர்.

இந்த நிகழ்வில் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதுவர் ஏ.நடராஜன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு, நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

அத்துடன், கொழும்பில் உள்ள இந்தியத் தூதரக பாதுகாப்பு ஆலோசகர் கப்டன் பிரகாஸ் கோபாலன், 51வது டிவிசன் தளபதி பிரிகேடியர் எஸ்.கே.திருநாவுக்கரசு ஆகியோரும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

IPKF-memorial-palaly (1)

IPKF-memorial-palaly (2)

IPKF-memorial-palaly (3)

IPKF-memorial-palaly (4)

IPKF-memorial-palaly (5)

1987ம் ஆண்டு ஒக்ரோபர் 12ம் நாள் நள்ளிரவு விடுதலைப் புலிகளின் தலைமையகத்தை முற்றுகையிடுவதற்காக யாழ்.பல்கலைக்கழக சூழலில் உலங்குவானூர்தி மூலம் தரையிறக்கப்பட்ட போது, விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்குப் பலியான இந்திய இராணுவத்தின் 10வது பரா கொமாண்டோ படைப்பிரிவைச் சேர்ந்த 33 கொமாண்டோக்கள் கொல்லப்பட்டனர்.

லெப்.கேணல் அருண்குமார் சப்ரா உள்ளிட்ட 33 இந்தியப் படையினர் நினைவாகவே பலாலியில் நினைவுத் தூபி அமைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *