மேலும்

13ஆவது திருத்தத்தை விரைவாக நடைமுறைப்படுத்த வேண்டும் – கொழும்பில் மோடி

?????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????சிறிலங்காவில் தமிழர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் சமஉரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும், 13வது திருத்தச்சட்டத்தை விரைவாக நடைமுறைப்பட வேண்டும் என்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி  வலியுறுத்தியுள்ளார்.

சிறிலங்காவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள அவர், இன்றுகாலை அதிபர் செயலகத்தில் நடந்த பேச்சுக்களின் பின்னர், சிறிலங்கா அதிபருடன் இணைந்து நடத்திய செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தனது உரையில்,“ சிறிலங்காவுக்கு வருகை தந்ததையிட்டு மகிழ்ச்சி அடைகிறேன்.

1987ஆம் ஆண்டுக்குப் பின்னர் இந்தியப் பிரதமர் சிறிலங்காவுக்கு வந்திருப்பது வரலாற்று சிறப்புமிக்கது.

சிறிலங்கா அதிபருடனான சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.

இந்த சந்திப்பின் மூலம் இருநாடுகளுக்கு இடையேயான எதிர்கால உறவு சிறப்பாக அமையும் என்ற புதிய நம்பிக்கை உதயமாகியுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையே உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதுடன், உறவைப் பலப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

வரலாறு மற்றும் மத ரீதியாக இந்தியா – சிறிலங்கா ஆகியன நெருங்கிய நட்பு கொண்டவை.

இந்தியா – சிறிலங்கா இடையே தொடர்ந்து உறவை வலுப்படுத்த இரு நாட்டுத் தலைவர்களும் அடிக்கடி சந்தித்துக் கொள்வது அவசியம்.

புதுடெல்லியில் இருந்து கொழும்புக்கு நேரடியாக விமான சேவை தொடங்கப்படும்.

சிறிலங்காப் பயணிகள் இந்தியா வந்ததும் நுழைவிசைவு வழங்கும் முறை வரும் ஏப்ரல் 14ஆம் நாள் முதல் நடைமுறைப்படுத்தப்படும்.

இருநாடுகளுக்கும் இடையேயான பொருளாதார ஒத்துழைப்பு நம் உறவை வலுப்படுத்தும் தூணாக உள்ளது.

கடந்த 10 ஆண்டுகளாக வர்த்தக ரீதியாக இந்தியா – சிறிலங்கா இடையேயான உறவு விருத்தியடைந்துள்ளது.

சுங்கத் துறையில் இன்று ஏற்படுத்தப்பட்டுள்ள புதிய ஒப்பந்தமானது இருநாட்டு வர்த்தகத்துக்கு மேலும் உதவியாக இருக்கும்.

திருக்கோணமலையில் பெற்றோலியக் களஞ்சியம் அமைக்க சிறிலங்கா பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு, இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனம் உதவும்.

சிறிலங்காவின் ரூபா மதிப்பை வலுப்படுத்த இந்தியாவின் மத்திய வங்கியும் சிறிலங்கா மத்திய வங்கியும் புதிய உடன்பாட்டை செய்துள்ளது.

மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பாக ஆலோசித்தேன்.

இருநாட்டு மீனவர் பிரச்சினையில் வாழ்வாதாரம், மனிதாபிமான கோணங்களும் பரிசீலிக்கப்பட வேண்டியுள்ளது. இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண சிறிது காலம் ஆகும்.

இருநாடுகளும் இணைந்து நீண்டகாலத் தீர்வைக் காண்பது அவசியம். இந்திய – சிறிலங்கா மீனவர் சங்கத்தினர் தங்கள் பேச்சுவார்த்தையில் விரைவில் சுமுக முடிவை எட்ட வேண்டும்.

அதன் அடிப்படையில் இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கையை இருநாட்டு அரசுகளும் முன்னெடுத்துச் செல்லும்.

சிறிலங்காவில் அமைதியை நிலைநாட்டுவதிலும், சிறிலங்காவில் தமிழர்களுக்கு சமஉரிமை வழங்குவதிலும், 13ஆவது சட்டத்திருத்தை நடைமுறைப்படுத்துவதிலும் இந்தியா துணை நிற்கும்.

சிறிலங்காவில் எந்தளவு கூடிய விரைவில் 13ஆவது சட்ட திருத்தம் நடைமுறைப்படுத்தப்படுகிறதோ அவ்வளவு விரைவாக இங்கு நீதியும், சமத்துவமும் மலரும்” என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *