மேலும்

புதுடெல்லியில் மைத்திரியை சந்தித்த சிறிலங்காவின் முக்கிய போர்க்குற்றவாளி

major general shavendra silvaபுதுடெல்லிக்குப் பயணம் மேற்கொண்டிருந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை, போர்க்குற்றவாளிகளில்  முக்கியமானவராக குற்றம்சாட்டப்பட்டு வரும் சிறிலங்கா இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா சந்தித்துப் பேசியுள்ளார்.

அண்மையில் இந்தியா சென்றிருந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, புதுடெல்லியில் உள்ள ஐரிசி மௌரியா செரட்டன் விடுதியில் தங்கியிருந்தார்.

எதிர்பாராத வகையில், அங்கு வந்த மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேசினார்.

முன்னர், ஐ.நாவுக்கான துணைத் தூதுவராக பணியாற்றிய மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, தற்போது புதுடெல்லியில் உள்ள தேசிய பாதுகாப்பு கல்லூரியில் கற்கை நெறியை மேற்கொண்டு வருகிறார்.

போரின் இறுதிக்கட்டத்தில், சரணடைய முன்வந்த விடுதலைப் புலிகளின் போராளிகள், தலைவர்கள் மற்றும் பொதுமக்களைப் படுகொலை செய்ய உத்தரவிட்டவர் இவரே என்று குற்றம்சாட்டப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *