மேலும்

அதிகாலையில் அலரி மாளிகையில் இருந்தார் மொகான் பீரிஸ் – நேரில் கண்டதை ரணில் விபரிப்பு

RANILஅதிபர் தேர்தலுக்கு மறுநாள் அதிகாலையில் தான் அலரி மாளிகைக்குச் சென்ற போது, அங்கு பிரதம நீதியரசர் மொகான் பீரிஸ் நின்றிருந்ததாக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

“அலரி மாளிகைக்கு வருமாறு கடந்த 9ம் நாள் அதிகாலை 4 மணியளவில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச கேட்டுக் கொண்டார்.

நான் அங்கு சென்றபோது அங்கிருந்தவர்களில் மொகான் பீரிசும் அடங்கியிருந்தார்.

அந்த நேரத்தில் அங்கு என்ன செய்கிறீர்கள் என்று அவரிடம் வினவினேன். ஆலோசனை கூறுவதற்காக தாம் வந்ததாக அவர் என்னிடம் சாதாரணமாக பதில் கூறினார்.

அதிகாலை 2.30 மணியளவில் தாம் அலரி மாளிகைக்கு அழைக்கப்பட்ட போது, ஏற்கனவே மொகான் பீரிஸ் அங்கு நின்று கொண்டிருந்ததாக, சட்டமா அதிபர் என்னிடம் தகவல் கூறினார்.

பின்னர் மொகான் பீரிஸ் என்னைத் தொலைபேசியில் அழைத்து, எதிர்கால வழக்குகளின் போது, அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கத் தாம் விரும்புவதாகவும், அதிபர் மைத்திரிபால சிறிசேனவை சந்திக்க வேண்டும் என்றும் கேட்டார்.

பின்னர் அவர், தமக்கு இராஜதந்திரப் பதவி தந்தால், தாம் பதவியில் இருந்து விலக விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

பின்னர், நான் வெளிவிவகார அமைச்சரிடம் வெளிநாடுகளில் உள்ள தூதுவர் பதவி வெற்றிடங்கள் குறித்து விசாரித்து விட்டு, வியட்னாம் அல்லது பிரேசிலுக்கான தூதுவராக நியமிக்கலாம் என்று கூறினேன்.

ஆனால் அவர், ரோமுக்கான தூதுவர் பதவியையே கோரினார்.

பிரதம நீதியரசர் விவகாரம் தொடர்பாக எந்த விவாதத்தை எதிர்கொள்ளவும்  நான் தயாராக இருக்கிறேன்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

2 கருத்துகள் “அதிகாலையில் அலரி மாளிகையில் இருந்தார் மொகான் பீரிஸ் – நேரில் கண்டதை ரணில் விபரிப்பு”

  1. தமிழ்க்கனல் இரா
    தமிழ்க்கனல் இரா says:

    என்னா ஒரு துணிவு..! பதவி ஆசை.. !

  2. சிவா says:

    சிங்கள பௌத்த பயங்கரவாத அரசுகளின் சிங்கள நீதிபதிகளின் தரத்துக்கு இவர் ஓர் எடுத்துக்காட்டு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *