மேலும்

நாமல், சஜின் பயன்படுத்திய ஆடம்பர சொகுசுப் பேருந்துகள் சிக்கின

namal-bus (1)கொமன்வெல்த் மாநாட்டுக்காக இறக்குமதி செய்யப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாமல் ராஜபக்சவினாலும், சஜின் வாஸ் குணவர்த்தனவினாலும் பயன்படுத்தப்பட்டு வந்த இரண்டு ஆடம்பர சொகுசு பேருந்துகள், மீட்கப்பட்டுள்ளன.

இவையிரண்டும், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சினால், கடந்த 2013ம் ஆண்டு நொவம்பர் மாதம் லங்கா அசோக் லேலன்ட் நிறுவனத்திடம் இருந்து, தலா 9 இலட்சம் ரூபா மாத வாடகைக்கு அமர்த்தப்பட்டவையாகும்.

இவற்றுக்காக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு இதுவரை காலமும், 25 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாக செலுத்தியுள்ள போதிலும், இவை எதற்காகப் பயனபடுத்தப்பட்டன என்பது கறித்து எந்தப் பதிவுகளும் இல்லை.

புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர், நடத்தப்பட்ட விசாரணைகளில், இது தெரிய வந்த்தும், குறித்த இரண்டு சொகுசு பேருந்துகளையும், வெளிவிவகார அமைச்சுக்கு வெளியே நிறுத்தி விட்டு சாரதிகள் தலைமறைவாகியுள்ளனர்.

இதையடுத்து குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் இவற்றைக் கைப்பற்றி விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

namal-bus (2)

இவற்றில் ஒன்று நாமல் ராஜபக்சவினாலும், மற்றையது, சஜின் வாஸ் குணவர்த்தனவினாலும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன.

அத்த்துன் ஊவா மாகாண முதல்வராக இருந்த சசீந்திர ராஜபக்சவும் இத்தகைய பேருந்தில் குடும்பத்தினருடன் பயணம் மேற்கொண்டதை நிரூபிக்கும் ஒளிப்படங்களும் வெளியாகியுள்ளன.

இந்த ஆடம்பர சொகுசுப் பேருந்து, நவீன படுக்கையறை, கழிப்பறை, உள்ளிட்ட ஒரு சொகுசு வீட்டுக்குரிய அத்தனை வசதிகளையும் கொண்டதாக அமைந்துள்ளது.

இந்தப் பேருந்துகளில் இருந்து சில சர்ச்சைக்குரிய பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *