மேலும்

Archives

திருகோணமலையில் அமெரிக்கத் தளபதி – மரைன் படைப்பிரிவை சந்தித்தார்

அமெரிக்காவின் பசுபிக் கட்டளைப் பீடத் தளபதி அட்மிரல் ஹரி ஹரிஸ், நேற்று திருகோணமலைக்குச் சென்று, துறைமுகத்தைப் பார்வையிட்டதுடன், சிறிலங்கா கடற்படையினர் மற்றும் அதிகாரிகளையும் சந்தித்துள்ளார்.

சிறிலங்கா அதிபருக்கு அமெரிக்க தளபதி அட்மிரல் ஹரிஸ் அளித்துள்ள உறுதிமொழி

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த, அமெரிக்காவின் பசுபிக் கட்டளைப் பீடத்தின் தளபதி அட்மிரல் ஹரி ஹரிஸ் நேற்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

தனிமைச் சிறையில் கருணா – கைதிகளால் அச்சுறுத்தல்

அரசாங்க வாகனத்தை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட, சிறிலங்காவின் முன்னாள் பிரதி அமைச்சர் கருணா எனப்படும், விநாயகமூர்த்தி முரளிதரன், கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் தனியான சிறைக்கூடத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டார் கருணா – சிறப்பு பாதுகாப்புடன் சிறையில் அடைப்பு

சிறிலங்காவின் முன்னைய அரசாங்கத்தில் பிரதி அமைச்சராக இருந்த கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் இன்று முற்பகல் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

சிறிலங்கா பாதுகாப்புச் செயலரை சந்தித்தார் இந்திய கடற்படைத் தளபதி

சிறிலங்காவுக்கான பயணத்தை மேற்கொண்டுள்ள இந்தியக் கடற்படைத் தளபதி அட்மிரல் சுனில் லன்பா, சிறிலங்கா பாதுகாப்புச் செயலரைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

சிறிலங்காவின் முப்படைத் தளபதிகளுடன் அமெரிக்க பசுபிக் கட்டளை தளபதி பேச்சு

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்காவின் பசுபிக் கட்டளைப் பீடத்தின் தளபதி அட்மிரல் ஹரி ஹரிஸ், நேற்று சிறிலங்காவின் முப்படைகளின் தளபதிகளைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் பிரெஞ்சுப் படைகளின் கூட்டுத் தளபதி பேச்சு

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள பிரெஞ்சுப் படைகளின் கூட்டுத் தளபதி றியர் அட்மிரல் டிடியர் பிளேட்டன், சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

காலி கலந்துரையாடலைத் தொடங்கி வைத்தார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சுடன் இணைந்து கடற்படை நடத்தும் கடல்சார் பாதுகாப்புக் கருத்தரங்கான, காலி கலந்துரையாடல் இன்று கொழும்பிலுள்ள கோல்பேஸ் விடுதியில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அமெரிக்காவின் பசுபிக் கட்டளைத் தளபதி அட்மிரல் ஹரிஸ் சிறிலங்கா பிரதமருடன் பேச்சு

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்காவின் பசுபிக் கட்டளை பீடத்தின் தளபதி, அட்மிரல் ஹரி ஹரிஸ், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தினார்.

தமிழர் தாயகத்தில் மீண்டும் உயிர்த்தெழுந்த மாவீரர் துயிலுமில்லங்கள் – படங்கள்

தமிழீழத் தேசிய மாவீரர் நாளான நேற்று, தமிழர் தாயகத்தில், இராணுவ ஆக்கிரமிப்பில் இல்லாத துயிலுமில்லங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் நேற்றுமாலை உணர்வுபூர்வமாக ஒன்று திரண்டு நினைவுச்சுடர் ஏற்றி மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தினர்.