மேலும்

Archives

தமிழர் தாயகமெங்கும் மாவீரர்களுக்கு நினைவுச் சுடர்கள் ஏற்றப்பட்டன

தமிழீழத் தாயக விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்கள் இன்று தமிழர் தாயகத்திலும், தமிழர்கள் வாழும் தேசங்களிலும் மிகவும் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டனர்.

தமிழர் தாயகத்தில் பரவலாக மாவீரர் நாள் நிகழ்வுகள் – காலையிலேயே தொடங்கியது

தமிழீழ மாவீரர் நாளை முன்னிட்டு இன்று தமிழர் தாயகப் பகுதிகளில் பரவலாக நினைவுகூரல் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. சிறிலங்கா அரசாங்கத்தின் எச்சரிக்கையையும் மீறி வடக்கிலும், கிழக்கிலும் தமிழ் மக்கள் இன்று காலை பல்வேறு மாவீரர் நாள் நிகழ்வுகளை ஒழுங்குபடுத்தி நடத்தியிருந்தனர்.

விதையாக வீழ்ந்தோரின் நினைவில்

மாவீரர் நாள்…..! உரிமைகள் மறுக்கப்பட்டு ஒடுக்கப்பட்டிருந்த தமிழ்த் தேசிய இனத்தின் தமிழீழ விடுதலைத் தாகம் தணிப்பதற்காக, தமதுயிரைக் கூடத் துச்சமென எண்ணி உயிர் கொடுத்தவர்களை நினைவு கூரும் நாள் இன்று.

யாழ்., வன்னியில் மாவீரர் நாளுக்குத் தயாராகும் துயிலுமில்லங்கள்

கடந்த எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர், தமிழீழ விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்களை நினைவு கூருவதற்கு, தமிழர் தாயகப் பகுதிகளில் தீவிரமான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

யாழ். பல்கலைக்கழகத்தில் பிரபாகரனின் 62 ஆவது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் 62 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு இன்று நண்பகல் யாழ். பல்கலைக்கழகத்தில், சிறப்பு நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது.

முன்னாள் கியூப அதிபர் பிடல் காஸ்ட்ரோ மறைந்தார்

கியூபாவின் முன்னாள் அதிபரும், இடதுசாரிப் புரட்சியாளருமான பிடல் காஸ்ட்ரோ, தனது 90 ஆவது வயதில் மரணமானதாக அந்த நாட்டின் தொலைக்காட்சி அறிவித்துள்ளது.

திருகோணமலைக் காட்டுக்குள் அமெரிக்கப் படை முகாம் – படங்கள்

திருகோணமலைத் துறைமுகத்தில் தரித்து நிற்கும் அமெரிக்க கடற்டையின் யுஎஸ்எஸ் சோமசெற் கப்பலில் வந்துள்ள அமெரிக்க மரைன் படைப்பிரிவினர் சிறிலங்கா கடற்படையினருடன் இணைந்து கூட்டுப் பயிற்சி ஒன்றை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ். பல்கலைக்கழகத்தில் மாவீரர்களுக்கு நினைவு வணக்கம் – மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்பு

தமிழீழ தாயக விடுதலைக்காய் உயிர் நீத்த மாவீரர்களை நினைவு கூரும் தேசிய மாவீரர் நாளை முன்னிட்டு, யாழ். பல்கலைக்கழகத்தில் இன்று நினைவு வணக்க நிகழ்வு இடம்பெற்றது.

சிறிலங்கா அதிபருடன் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நீண்ட சந்திப்பு

தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு புதிய அரசியலமைப்பையே அறிமுகப்படுத்துமாறு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராஜீவ் கொலை பின்னணியை விபரிக்கும் நளினியின் வாழ்க்கை வரலாற்று நூல் சென்னையில் வெளியீடு

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் நளினியின் வாழ்க்கை வரலாற்றுத் தகவல்களை உள்ளடக்கிய  “ராஜீவ் கொலை: மறைக்கப்பட்ட உண்மைகளும்; பிரியங்கா, நளினி சந்திப்பும்”  என்ற நூல் சென்னையில் நேற்று வெளியிடப்பட்டது.