மேலும்

Archives

வியட்னாம் பயணத்தை சுருக்கிக் கொண்டு நாடு திரும்புகிறார் ரணில்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமது வெளிநாட்டுப் பயணத்தை சுருக்கிக் கொண்டு நாடு திரும்பத் தீர்மானித்துள்ளார்.

கொலன்னாவ குப்பைமேடு சரிந்த விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 19 ஆக அதிகரிப்பு

கொலன்னாவ- மீதொட்டமுல்லவில் உள்ள குப்பைமேடு சரிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது. நேற்றுமுன்தினம் பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் பெருமளவு வீடுகள் குப்பை மேட்டின் கீழ் புதைந்து போயின.

ஜப்பான்- சிறிலங்கா இடையே இராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்த முடிவு

இந்தியப் பெருங்கடலில் அமைதியை பாதுகாப்பது என்ற பொதுவான தளத்தின் கீழ், சிறிலங்கா ஆயுதப் படைகளுக்கும், ஜப்பானிய தற்பாதுகாப்புப் படைகளுக்கும் இடையில் இராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்தத் திட்டமிட்டுள்ளன.

கொலன்னாவ குப்பைமேடு வீடுகளுக்கு மேல் சரிந்து 17 பேர் பலி

கொலன்னாவ- மீதொட்டமுல்லவில் நேற்று பிற்பகல் குப்பை மேடு சரிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனிவிரத்ன தெரிவித்தார்.

சீனாவை எதிர்கொள்வதற்கு சிறிலங்காவைப் பலப்படுத்துகிறது ஜப்பான்

இந்தியப் பெருங்கடலில் சீனாவின் முன்னகர்வுகளுக்கு எதிர் நடவடிக்கையாக, சிறிலங்கா கடலோரக் காவல்படையின் திறனை வலுப்படுத்துவதற்கு ஜப்பான் உதவ முன்வந்துள்ளது என்று ஜப்பானிய ஊடகமான The Asahi Shimbun செய்தி வெளியிட்டுள்ளது.

முதலமைச்சர் விக்னேஸ்வரனைச் சந்தித்தார் யாழ். படைகளின் தலைமையக தளபதி

யாழ். படைகளின் தலைமையக கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷண ஹெற்றியாராச்சி, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

அமெரிக்க – சிறிலங்கா இராணுவ ஒத்துழைப்பு: யாருக்குச் சாதகம்?

சிறிலங்கா ஒரு சிக்கலான நாடாகும். ஜனவரி 2015ல் மைத்திரிபால சிறிசேன அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் சிறிலங்காவின் வெளியுறவுக் கோட்பாட்டில் பல்வேறு மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன என நிலாந்தி சமரநாயக்க தனது அண்மைய கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.

22 மேஜர் ஜெனரல்களின் கனவைப் பொசுக்கிய சிறிலங்கா இராணுவத் தளபதி

சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா மூன்றாவது தடவையும் தனது பதவிக்காலத்தை நீடிப்பதற்கான கோரிக்கையை, சிறிலங்கா அதிபரிடம் விடுத்திருப்பதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஜப்பானில் சிறிலங்கா பிரதமர்- இன்று பேச்சுக்களை ஆரம்பிக்கிறார்

ஒரு வாரகாலப் பயணத்தை மேற்கொண்டு ஜப்பான் சென்றுள்ள சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இன்று அதிகாரபூர்வ பேச்சுக்களை ஆரம்பிக்கவுள்ளார்.

சிறிலங்காவில் எதிர்பாராத வரவேற்பு – சீன உயர் ஆலோசகர் வியப்பு

சிறிலங்காவில் தாம் எதிர்பார்த்ததை விடவும் பெரியளவிலான வரவேற்பு அளிக்கப்பட்டதாக, சீன மக்கள் அரசியல் ஆலோசனை சபைக்கான தேசிய குழுவின் த லைவர் யூ செங் ஷெங் வியப்புடன் தெரிவித்துள்ளார்.