மேலும்

கொலன்னாவ குப்பைமேடு வீடுகளுக்கு மேல் சரிந்து 17 பேர் பலி

meethotamulla-garbage-dump (1)

கொலன்னாவ- மீதொட்டமுல்லவில் நேற்று பிற்பகல் குப்பை மேடு சரிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனிவிரத்ன தெரிவித்தார்.

அதேவேளை, இந்த விபத்தில் 145 வீடுகள் சேதமடைந்திருப்பதாகவும், 700 வரையானோர் வீடுகளை இழந்து நிர்க்கதியாகியுள்ளனர் என்றும் சிறிலங்கா காவல்துறைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

முன்னைய செய்தி

கொழும்பு – கொலன்னாவவில் பாரிய குப்பைமேடு நேற்று வீடுகளுக்கு மேல் சரிந்து விழுந்ததில், குறைந்தது 10 பேர் பலியாகினர். 40இற்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளன.

கொலன்னாவ- மீதொட்டமுல்லவில் உள்ள 300 அடி உயரமுள்ள குப்பை மேட்டின் உச்சியில் நேற்று பிற்பகல் தீவிபத்து ஏற்பட்டது. சிங்கள- தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, கொளுத்தப்பட்ட பட்டாசினால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

தீவிபத்தை அடுத்து. குப்பை மேடு சரிந்து, அருகில் இருந்த வீடுகளுக்கு மேல் விழுந்தது. அப்பகுதியில் இருந்த 100 வீடுகளில் 40 வீடுகள் இதில் புதைந்து போயின. வீடுகளுக்குள் பலர் சிக்கினர்.

புதைந்து போன வீடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளப்பட்டது. நூற்றுக்கணக்கான சிறிலங்கா இராணுவத்தினரும், சிறப்பு அதிரடிப்படையினரும் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.

meethotamulla-garbage-dump (1)meethotamulla-garbage-dump (2)meethotamulla-garbage-dump (3)meethotamulla-garbage-dump (4)meethotamulla-garbage-dump (5)

சிறிலங்கா விமானப்படை உலங்குவானூர்தி ஒன்று தீயணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது.

இந்த விபத்தில் மூன்று சிறுவர்கள் உள்ளிட்ட 10 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. 12 பேர் காயமடைந்து தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து மீட்புப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *