சென்னையில் காவல்துறையின் தடையை மீறி ஈழத்தமிழர் படுகொலை நினைவேந்தல் நிகழ்வு
சென்னை மெரினா கடற்கரையில், காவல்துறையினரின் தடையை மீறி நேற்றுமாலை ஈழத்தமிழர் படுகொலை நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
சென்னை மெரினா கடற்கரையில், காவல்துறையினரின் தடையை மீறி நேற்றுமாலை ஈழத்தமிழர் படுகொலை நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
சிறிலங்காவில் நடந்து முடிந்த முடிந்த குருதி தோய்ந்த உள்நாட்டு யுத்தத்தின் எட்டாவது ஆண்டு கடந்த வெள்ளியன்று நிறைவடைந்தது. இந்த யுத்தத்தின் போது காணாமற் போன உறவுகளை இவர்களின் குடும்பத்தவர்கள் தேடிக்கொண்டிருக்கும் அதேவேளையில் இராணுவ ஆக்கிரமிப்பிற்குள் உள்ள தமது நிலங்களை விடுவிக்குமாறும் தமிழ் மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்திய கடற்படையின் ஆழ்கடல் ரோந்துக் கப்பலான ஐஎன்எஸ் சுமேதா மூன்று நாள்கள் பயணமாக நேற்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
குருநாகல் – மல்லவப்பிட்டியவில் முஸ்லிம்களின் பள்ளிவாசல் மீது இன்று அதிகாலையில் இனந்தெரியாத நபர்களால் பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாயகம் – தேசியம் – தன்னாட்சியுரிமை என ஈழத்தமிழ் மக்களின் ஜனநாயகப் போராட்ட வடிவமாகத் திகழும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது அரசவையின் ஏழாவது நேரடி அமர்வு அமெரிக்காவில் தொடங்கியது.
கனேடிய கடற்படையின் போர்க்கப்பல் ஒன்று நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. எச்எம்சிஎஸ் வின்னிபெக் HMCS Winnipeg (FFH 338) என்ற றோயல் கனேடிய கடற்படைப் போர்க்கப்பலே சிறிலங்காவுக்கு பயிற்சி மற்றும் நல்லெண்ணப் பயணத்தை மேற்கொண்டுள்ளது.
வடக்கின் அபிவிருத்தி தொடர்பாக ஆராய்வதற்காக நேற்று யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொண்டிருந்த சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று பருத்தித்துறை துறைமுகத்தை பார்வையிட்டார்.
பளை- கச்சார்வெளிப் பகுதியில் சிறிலங்கா காவல்துறையினரின் ரோந்து வாகனம் மீது நேற்று அதிகாலையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தொடர்பாக எவரும் கைது செய்யப்படவில்லை என்று சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பளைப் பிரதேசத்தில் இன்று அதிகாலையில் இடம்பெற்றதாக கூறப்படும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்றையடுத்து, அங்கு பெருமளவு சிறிலங்கா படையினர், சிறப்பு அதிரடிப்படையினர், காவல்துறையினர் குவிக்கப்பட்டு தேடுதல்கள் நடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் எட்டாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்று முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.