முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்
நெஞ்சமெலாம் பதைபதைக்க, உலகம் முழுதும் வேடிக்கை பார்த்திருக்க, ஆயிரக்கணக்கான எம் உறவுகள் கொத்துக் கொத்தாய்க் கொன்றழிக்கப்பட்ட கோரம் நிகழ்ந்து இன்றோடு எட்டு ஆண்டுகள்.
நெஞ்சமெலாம் பதைபதைக்க, உலகம் முழுதும் வேடிக்கை பார்த்திருக்க, ஆயிரக்கணக்கான எம் உறவுகள் கொத்துக் கொத்தாய்க் கொன்றழிக்கப்பட்ட கோரம் நிகழ்ந்து இன்றோடு எட்டு ஆண்டுகள்.
தமிழினப் படுகொலையை நினைவேந்தும் மே-18 தமிழீழத் தேசிய துக்க நாளில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், அமெரிக்காவில் முள்ளிவாய்க்கால் நினைவுப் பேருரை ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
சிறிலங்காவுக்கு 2 பில்லியன் யுவான் (44 பில்லியன் ரூபா) உதவியை வழங்குவதாக சீன அதிபர் ஷி ஜின்பிங் நேற்று உறுதி அளித்துள்ளார். சீன அதிபர் தலைமையிலான குழுவினருக்கும் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினருக்கும் இடையில் பீஜிங்கில் நேற்று நடந்த இருதரப்பு பேச்சுக்களின் போதே இந்த உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பயணம் மற்றும் பாதுகாப்புக்காக வந்திருந்த போது, பழுதடைந்த நிலையில் கண்டியில் தரித்து நின்ற இந்திய விமானப்படையின் உலங்குவானூர்தி திருத்தப்பட்ட பின்னர் இன்று புறப்பட்டுச் சென்றது.
அவுஸ்ரேலிய எல்லை காவல்படையின் பாரிய ரோந்துக் கப்பலான “ஓசன் ஷீல்ட்” திருகோணமலைத் துறைமுகத்தை இன்று வந்தடைந்துள்ளது.
தெற்கு மற்றும் மத்திய ஆசியா மீதான தனது நிர்வாகத்தின் வேறு இலக்குகளை அடைந்து கொள்வதற்காகவே அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெளிநாடுகளுக்கான உதவித் திட்டத்தைக் குறைப்பதற்கு திட்டமிட்டிருப்பது போல் தெரிகிறது.
துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை உள்ளிட்ட சிறிலங்காவின் அனைத்து அபிவிருத்தி முயற்சிகளுக்கும் சீனா முழுமையான ஆதரவை வழங்கும் என்று சீன அதிபர் ஷி ஜின்பிங் உறுதியளித்துள்ளார்.
அவுஸ்ரேலியாவின் கூட்டு முகவர் அதிரடிப்படையின் தளபதியான எயர் வைஸ் மார்ஷல் ஸ்டீபன் ஒஸ்போர்ன் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டு பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகளுடன் முக்கிய பேச்சுக்களை நடத்தியுள்ளார்.
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க பிரதிநிதிகள் சபை உறுப்பினர் பில் ஜோன்சன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
சீனாவின் பீஜிங் நகரில் நேற்று ஆரம்பமான ஒரு அணை ஒரு பாதை உச்சி மாநாட்டில் பங்கேற்கும் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் சீன அதிபர் ஷி ஜின்பிங், சந்தித்துப் பேசினார்.