மேலும்

Archives

இந்தியக் கடற்படையின் டோனியர் விமானங்கள் பயிற்சியை முடித்து திரும்பின

சிறிலங்கா கடற்படை மற்றும் விமானப்படையினருக்குப் பயிற்சிகளை அளிப்பதற்காக, கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்திருந்த இந்தியக் கடற்படையின் டோனியர் விமானங்கள், பயிற்சியை முடித்துக் கொண்டு திரும்பியுள்ளன.

சிறிலங்கா கடற்படையுடன் இணைந்து கூட்டுப் பயிற்சி – பிரெஞ்சு போர்க்கப்பலின் தளபதி தெரிவிப்பு

சிறிலங்கா கடற்படையுடன் இணைந்து கூட்டுப் பயிற்சிகளை ஒழுங்கு செய்யவுள்ளதாக பிரெஞ்சுக் கடற்படையின் மிஸ்ரால் கப்பலின் கட்டளை அதிகாரி கப்டன் ஸ்ரனிஸ்லஸ் டி சார்கெரஸ் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சருடன் சம்பந்தன் நீண்ட பேச்சு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

முதல்வருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை மீளப்பெற்றது தமிழ் அரசுக் கட்சி

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக ஆளுனரிடம் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையை, இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மாகாணசபை உறுப்பினர்கள் மீளப் பெற்றுள்ளனர்.

கல்வி, விவசாய அமைச்சுக்களைப் பொறுப்பேற்றார் விக்னேஸ்வரன்

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இன்று பிற்பகல், ஆளுனர் ரெஜினோல்ட் குரே முன்னிலையில் கல்வி மற்றும் விவசாய அமைச்சுப் பொறுப்புக்களையும் ஏற்றுக் கொண்டுள்ளார்.

பிரெஞ்சுப் போர்க்கப்பலில் சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

நல்லெண்ணப் பயணமாக கொழும்பு துறைமுகத்துக்கு வந்துள்ள பிரெஞ்சுப் போர்க்கப்பல்களை, சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன நேற்று பார்வையிட்டார்.

காணாமல்போனோருக்கான பணியகம் மிகவும் அவசியம் – அமெரிக்க தூதுவர்

காணாமல் போனோருக்கான பணியகம் மிகவும் அவசியமானது என்று சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப் தெரிவித்துள்ளார். சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப் நேற்று கிழக்கு மாகாணத்துக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார்.

கொழும்பு துறைமுகத்தில் பிரெஞ்சுப் போர்க்கப்பல்கள்

பிரெஞ்சு கடற்படையின் இரண்டு பாரிய போர்க்கப்பல்கள் நல்லெண்ணப் பயணமாக இன்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.

சிறிலங்கா படைகளுக்கு பயிற்சி அளிக்க கட்டுநாயக்க வந்துள்ள இந்திய கடற்படை விமானம்

சிறிலங்கா கடற்படை மற்றும் விமானப்படைக்குப் பயிற்சி அளிப்பதற்காக, இந்திய கடற்படையின் டோனியர் விமானம் ஒன்று நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

நம்பிக்கையில்லாப் பிரேரணை மீளப் பெறப்படும் – விக்னேஸ்வரனுக்கு சம்பந்தன் கடிதம்

வடக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை மீளப் பெறப்படும் என்று வடக்கு மாகாண ஆளுனருக்கு தொலைபேசி மூலம் அறிவித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.