விக்னேஸ்வரனின் எழுச்சியும் வீழ்ச்சியும்
அன்று அவர் வடக்கிற்குச் சாத்தியமான ஒரு கதாநாயகனாகத் தெரிவு செய்யப்பட்டார். ஆனால் இன்று அவர் தன்னை வேட்பாளராகத் தெரிவு செய்த பிரதான அரசியற் கட்சியின் அழுத்தத்திற்கு முகங்கொடுத்துள்ளார்.
அன்று அவர் வடக்கிற்குச் சாத்தியமான ஒரு கதாநாயகனாகத் தெரிவு செய்யப்பட்டார். ஆனால் இன்று அவர் தன்னை வேட்பாளராகத் தெரிவு செய்த பிரதான அரசியற் கட்சியின் அழுத்தத்திற்கு முகங்கொடுத்துள்ளார்.
தமிழ் மக்களின் அரசியல் பலம் சிதைவடைவதற்கு இடமளியாமல், சம்பந்தப்பட்டவர்கள் புரிந்துணர்வுடனும், விட்டுக் கொடுப்புடனும் தமது பரிந்துரைகளை ஏற்று உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று என்று நல்லை ஆதீன குரு முதல்வரும், யாழ். மறைமாவட்ட ஆயரும் இணைந்து கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சிறிலங்காவில் எதிர்காலத்தில் முதலீடுகளை அதிகரிப்பது தொடர்பாக, இந்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியுடன், சிறிலங்கா நிதியமைச்சர் மங்கள சமரவீர பேச்சுக்களை நடத்தியுள்ளார்.
வடக்கு மாகாணசபையின் அவைத் தலைவருக்காக நுட்பமான சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய புதிய சிம்மாசனம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய இடங்களில் பேரணி மற்றும் கவனயீர்ப்புப் போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தமிழ் மக்கள் பேரவையினால் அழைப்பு விடுக்கப்பட்ட முழு அடைப்புப் போராட்டத்தினால் இன்று வடக்கு மாகாணத்தில் பல பகுதிகளிலும், இயல்பு நிலை பாதிக்கப்பட்டது.
வடக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராக தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை கைவிடச் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், முதலமைச்சர் மீது நம்பிக்கை தெரிவித்து 15 உறுப்பினர்கள் நேற்று ஆளுனரிடம் கடிதங்களைச் சமர்ப்பித்துள்ளனர்.
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் தமிழ் அரசுக் கட்சி கைவிடுவதற்கும், இரண்டு அமைச்சர்களை கட்டாய விடுப்பில் அனுப்ப எடுத்த முடிவை முதலமைச்சர் விலக்கிக் கொள்வதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நேற்றிரவு வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரேயிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கடற்படைத் தளபதி அட்மிரல் சகாவுல்லா, சிறிலங்கா அதிபர் , பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மற்றும் பாதுகாப்புத்துறை உயர் அதிகாரிகளைச் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.