மேலும்

Tag Archives: ரணில் விக்கிரமசிங்க

ரணிலைச் சந்தித்தார் கோத்தா

ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கும் இடையில் நேற்றுமாலை சந்திப்பு  இடம்பெற்றிருப்பதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பெரும்பான்மையை நிரூபித்தாலும் ரணிலுக்கு பதவி கிடைக்காது – உதய கம்மன்பில

நாடாளுமன்றத்தில் ரணில் விக்கிரமசிங்க பெரும்பான்மை பலத்தை நிரூபித்தாலும், அவருக்கு நாங்கள் பிரதமர் பதவியை வழங்கமாட்டோம் என்று சூளுரைத்துள்ளார் கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில.

வடக்கு வங்கிகளில் 100 பில்லியன் ரூபா – குறிவைக்கும் சிறிலங்கா பிரதமர்

வடக்கில் உள்ள வங்கிகளில் 100 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி வைப்புச் செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஐதேகவில் மீண்டும் குழப்பம் – பின்வரிசை உறுப்பினர்கள் போர்க்கொடி

ஐதேகவின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் கட்சித் தலைமைக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் நடைபெறும் கூட்டங்களைப் புறக்கணிக்கப் போவதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

வாக்கெடுப்பு முடிந்ததும் விகாரைக்கு ஓடிய ரணில்

கூட்டு எதிரணியினரால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையைத் தோற்கடித்த பின்னர், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கங்காராமய விகாரைக்குச் சென்று வழிபாடு நடத்தினார்.

உச்சக்கட்ட பரபரப்பில் கொழும்பு அரசியல் – கூட்டமைப்பு மீது குவியும் பார்வை

சிறிலங்கா அரசியலில் உச்சக்கட்ட பரப்பரப்பு ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், அனைத்து தரப்பினதும் கவனமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது ஒன்று குவிந்துள்ளது.

ரணிலின் அரசியல் தலைவிதி மாறுமா? – இன்றிரவு வாக்கெடுப்பு

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கூட்டு எதிரணியினரால் கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை இன்று விவாதிக்கப்பட்டு வாக்கெடுப்புக்கு விடப்படவுள்ளது.

ரணில் பதவி விலக வேண்டும் – சுதந்திரக் கட்சி நாடாளுமன்றக் குழு முடிவு

நம்பிக்கையில்லா பிரேரணை நாளை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படுவதற்கு முன்னதாக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவியில் இருந்து விலகுமாறு கோருவதென, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்றக் குழு  தீர்மானித்துள்ளது.

ரணிலைக் கவிழ்க்க நெருங்கிய சகாக்களே திட்டம்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்க, அமைச்சர்கள் பலரும் விருப்பம் வெளியிட்டுள்ளனர்.

மகிந்தவையும் சந்தித்தார் சீனத் தூதுவர்

சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் செங் ஷுயுவான், சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.