மேலும்

Tag Archives: மில்லியன்

சிறிலங்காவின் தொடருந்து துறை அபிவிருத்திக்காக 318 மில்லியன் டொலர் கடன் வழங்குகிறது இந்தியா

சிறிலங்காவின் தொடருந்து துறையை அபிவிருத்தி செய்வதற்காக 318 மில்லியன் டொலரை கடனாக வழங்குவது தொடர்பாக இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் நேற்று புரிந்துணர்வு உடன்பாடு கையெழுத்திடப்பட்டது.

அவசர நோயாளர் காவு வண்டிச் சேவைக்கு 20 மில்லியன் டொலரை வழங்குகிறது இந்தியா

சிறிலங்காவின் அனைத்துப் பகுதிகளுக்கும் அவசர நோயாளர் காவு வண்டிச் சேவையை விரிவுபடுத்துவதற்கு, இந்தியா 20 மில்லியன் டொலர்களை கொடையாக வழங்கவுள்ளது.

சிறிலங்காவுக்கு 800 மில்லியன் டொலரை வழங்குகிறது ஆசிய அபிவிருத்தி வங்கி

சிறிலங்காவுக்கு இந்த ஆண்டில் 800 மில்லியன் டொலர் கடன்களை வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி இணங்கியுள்ளது.

போர்க்குற்ற நீதிமன்றில் சிறிலங்கா படையினரை நிறுத்த அனுமதியேன் – மகிந்த சூளுரை

சிறிலங்கா படையினரை அனைத்துலக போர்க்குற்ற நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன் என்று சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச சூளுரைத்துள்ளார்.

மிலேனியம் சவால் திட்டப் பணியகத்தை சிறிலங்காவில் அமைக்கிறது அமெரிக்கா

அமெரிக்காவின் மிலேனியம் சவால் ஒத்துழைப்பு திட்டப் பணியகத்தை சிறிலங்காவில் அமைப்பதற்கு, அமைச்சரவை நேற்று அனுமதி வழங்கியுள்ளது.

சிறிலங்காவில் பணியாற்ற ஆறரை இலட்சம் டொலர் தேவை – ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் செயற்பாடுகளை சிறிலங்காவில் இந்த ஆண்டு முன்னெடுப்பதற்கு ஆறு இலட்சத்து 48 ஆயிரம் டொலர் நிதி தேவைப்படுவதாக ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டைக்கு 1 மில்லியன் சீனர்கள் வரவுள்ளனரா?

அம்பாந்தோட்டையில் சீனாவின் திட்டங்களில் பணியாற்ற ஒரு மில்லியன் சீனர்கள் சிறிலங்காவுக்கு வருவதற்கு நுழைவிசைவுக்கு விண்ணப்பித்துள்ளதாக, ஜாதிக ஹெல உறுமய வெளியிட்டிருந்த தகவலை சிறிலங்காவின் அமைச்சரவைப் பேச்சாளரான ராஜித சேனாரத்ன நிராகரித்துள்ளார்.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்குவதற்கான கட்டமைப்பு உடன்பாடு கைச்சாத்து

அம்பாந்தோட்டைத் துறைமுகம் தொடர்பாக சீன நிறுவனத்துக்கும், சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இடையில், கட்டமைப்பு உடன்பாடு ஒன்று நேற்றுமாலை கையெழுத்திடப்பட்டுள்ளது.

ஆவா குழு சந்தேகநபர்கள் 11 பேர் பிணையில் விடுவிப்பு

வடக்கில் செயற்பட்ட ஆவா குழு உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 11 பேர் இன்று, கொழும்பு மேலதிக நீதிவான் அருணி ஆட்டிக்கலவினால் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

யாழ்ப்பாணத்தில் 3000 தொட்டிகளை அமைக்கவுள்ளது இந்தியா

யாழ்ப்பாணக் குடாநாட்டில் மழைநீரைச் சேகரிக்கும் 3000 நீர்த்தாங்கித் தொட்டிகளை அமைப்பதற்கு, இந்தியாவுடன் புரிந்துணர்வு உடன்படிக்கை செய்து கொள்ளப்படவுள்ளது. இதற்கு சிறிலங்கா அமைச்சரவை நேற்று அனுமதி அளித்துள்ளது.