படகில் வந்த 20 அகதிகளை கொழும்புக்குத் திருப்பி அனுப்பியது அவுஸ்ரேலியா
கிறிஸ்மஸ் தீவில் இருந்து சுமார் 20 அகதிகள் வாடகை விமானம் ஒன்றின் மூலம் இன்று காலை கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்று தி ஒஸ்ரேலியன் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
கிறிஸ்மஸ் தீவில் இருந்து சுமார் 20 அகதிகள் வாடகை விமானம் ஒன்றின் மூலம் இன்று காலை கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்று தி ஒஸ்ரேலியன் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
வடக்கு அரசியலில் அண்மையில் ஏற்பட்ட குழப்பங்களுக்கு, தெற்கிலேயே திட்டங்கள் வகுக்கப்பட்டதாக குற்றம்சாட்டியிருந்த வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தற்போது, அதுபற்றிப் பேசுவதை தவிர்த்துக் கொண்டுள்ளார்.
வடக்கு அரசியலில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், நேற்று மாலை வரையில் சாதகமான எந்த பதிலும், முதலமைச்சரிடம் இருந்து கிடைக்கவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணசபையின் அவைத் தலைவருக்காக நுட்பமான சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய புதிய சிம்மாசனம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
சிறிலங்காவில் வெள்ள அனர்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மனிதாபிமான உதவிச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு அமெரிக்காவின் பசுபிக் கட்டளைப் பீடத்தின் இராணுவ விமானம் ஒன்று, நிபுணர்களுடன் கொழும்பு வரவுள்ளது.
சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் முன்னாள் சாரதியான கப்டன் திஸ்ஸ விமலசேன நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று காலை கைது செய்யப்பட்டார்.
அமெரிக்க கடற்படையின் யுஎஸ்எஸ் லேக் எரி கப்பலில், கொழும்புத் துறைமுகத்துக்கு வந்துள்ள அமெரிக்க கடற்படையினர், சிறிலங்கா கடற்படையின் மரைன் படைப்பிரிவினருடன் இணைந்து, வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உதவிப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
1.5 பில்லியன் டொலர் செலவில் சீன நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டு வரும் கொழும்பு துறைமுக நகரத்தை, கொழும்புடன் இணைப்பதற்கான நெடுஞ்சாலை, சுரங்கப்பாதைகள், மற்றும் தொடருந்துப் பாதை என்பன அமைக்கப்படவுள்ளன.
சிறிலங்காவில் ஆட்சியில் இருக்கும் தற்போதைய அரசாங்கத்தினால் ஜப்பானில் உள்ள இலங்கையர்கள் விரக்தி அடைந்துள்ளனர் என்றும், ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர் என்றும் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தனிப்பட்ட பயணமாக அமெரிக்கா சென்றுள்ள சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மருத்துவ பரிசோதனைகளை முடித்துக் கொண்டுள்ள நிலையில், அடுத்தவாரம் அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்துவார் என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.