அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான இராஜாங்கச் செயலரைச் சந்தித்தார் மங்கள
அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான இராஜாங்கச் செயலர் தோமஸ் சானொனை, சிறிலங்காவின் நிதி அமைச்சர் மங்கள சமரவீர சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான இராஜாங்கச் செயலர் தோமஸ் சானொனை, சிறிலங்காவின் நிதி அமைச்சர் மங்கள சமரவீர சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
எதிர்பார்த்தபடி முக்கிய சந்திப்புகள் கைகூடாமலேயே சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பியுள்ளார்.
கொழும்பு துறைமுக நகரத்தை உள்ளடக்கிய, சிறிலங்காவின் புதிய வரைபடம் அடுத்த ஆண்டு வெளியிடப்படவுள்ளது. புதிய வரைபடத்தை தயாரிக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், அடுத்த ஆண்டில் அது வெளியிடப்படும் என்றும் நிலஅளவைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் செயலராக இருந்த லலித் வீரதுங்கவும், தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் அனுஷ பல்பிட்டவும், தமக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்துள்ளனர்.
சிறிலங்காவின் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச இன்று பதவி விலகுவார் என்று அரசாங்க வட்டாரங்களை மேற்கொள்காட்டி, கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
யாழ்ப்பாணக் குடாநாட்டில் சிறப்பு அதிரடிப்படையினருடன் இணைந்து சிறிலங்கா காவல்துறையினர் மேற்கொண்டு வரும் தேடுதல் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால், ஆவா போன்ற வாள்வெட்டுக் குழுக்களின் முக்கிய தலைவர்கள் தெற்கு நோக்கித் தப்பியோடத் தொடங்கியுள்ளனர்.
இந்தியாவிடம் இருந்து சிறிலங்கா கடற்படைக்காக வாங்கப்பட்ட ‘சயுரால’ என்ற ஆழ்கடல் ரோந்துக் கப்பலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று கடற்படையில் அதிகாரபூர்வமாக இணைத்து வைக்கவுள்ளார்.
அண்டை நாடுகளைக் கைளும் விடயத்தில் இந்தியாவின் அணுகுமுறைகளில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்றும், சிறிலங்கா விடயத்தில் இந்தியா தவறிழைத்து விட்டதாகவும், தெரிவித்துள்ளார் இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன்.
புலனாய்வு விவகாரங்கள் தொடர்பாக எந்தக் கருத்தையும் வெளியிட முடியாது என்று சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.
சிறிலங்காவில் அமெரிக்க குடிமக்கள்- குறிப்பாக பெண்கள், முச்சக்கர வண்டிகளில் பயணம் செய்வதை தவிர்க்குமாறு, அமெரிக்க தூதரகம் வெளியிட்டிருந்த எச்சரிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.