மேலும்

Tag Archives: கொழும்பு

மைத்திரியுடன் பேசுமாறு மகிந்தவுக்கு அழுத்தம் கொடுக்கும் வெளிநாட்டு சக்தி

மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன், மகிந்த ராஜபக்ச தலைமையிலான அணியை மீண்டும் இணைய வைப்பதில் வெளிநாட்டு சக்தி ஒன்று, அழுத்தங்களைக் கொடுத்திருப்பதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

உதவிக் குழுக்களுடன் சீனாவின் மூன்று போர்க்கப்பல்கள் கொழும்பு வந்தன

சிறிலங்காவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உதவிப் பணிகளை மேற்கொள்வதற்கும், உதவிப் பொருட்களை ஏற்றிக் கொண்டும் சீன கடற்படையின் மூன்று போர்க்கப்பல்கள் நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன.

களுத்துறையில் உடையும் நிலையில் அணைக்கட்டு – மக்களை வெளியேறுமாறு அவசர அறிவிப்பு

களுத்துறை மாவட்டத்தில் உள்ள பாணப்பிட்டிய பொல்கொட அணை கடும் மழையால் உடையும் ஆபத்து ஏற்பட்டிருப்பதாக சிறிலங்கா காவல்துறை எச்சரித்துள்ளது.

கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி மறைந்தார்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியுமான அப்பாத்துரை விநாயகமூர்த்தி இன்று பிற்பகல் தனியார் மருத்துவமனை ஒன்றில் காலமானார்.

சிறிலங்காவில் ஜூலை 1ஆம் நாள் நடைமுறைக்கு வருகிறது நெகிழ்வுமுறை வேலை நேரத் திட்டம்

அரச பணியாளர்களுக்கான நெகிழ்வுமுறை வேலைநேரத் திட்டத்தை சிறிலங்கா அரசாங்கம் வரும் ஜூலை முதலாம் நாள் தொடக்கம் நடைமுறைப்படுத்தவுள்ளது.

வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணிகளில் இறங்கியது இந்தியக் கடற்படை

சிறிலங்காவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அவசர மீட்பு மற்றும் மருத்துவ உதவிப் பணிகளில் இந்தியக் கடற்படையும் ஈடுபட்டுள்ளது.

பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் சிறிலங்கா

சிறிலங்காவில் கடும் மழையினால் ஏற்பட்டுள்ள பெருவெள்ளம், நிலச்சரிவுகளில் ஏராளமானோர் பலியாகியுள்ளனர். பெருமளவானோர் காணாமல் போயுள்ளனர். இலட்சக்கணக்கான குடும்பங்கள் நிர்க்கதியான நிலையில் உள்ளன.

கொழும்புத் துறைமுகத்தில் இந்தியக் கடற்படையின் சுமேதா போர்க்கப்பல்

இந்திய கடற்படையின் ஆழ்கடல் ரோந்துக் கப்பலான ஐஎன்எஸ் சுமேதா மூன்று நாள்கள் பயணமாக நேற்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

திங்களன்று அமைச்சரவை மாற்றம் – மங்களவிடம் இருந்து வெளிவிவகார அமைச்சு பறிபோகிறது

சிறிலங்கா அமைச்சரவை வரும் திங்கட்கிழமை மாற்றியமைக்கப்படவுள்ளதாகவும், வெளிவிவகார அமைச்சர் பதவியில் இருந்து மங்கள சமரவீர நீக்கப்படவுள்ளதாகவும் கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சீனாவின் முதலீடுகளை வரவேற்கிறார் சிறிலங்கா பிரதமர்

சிறிலங்காவில் பிரதான உட்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டங்களில் சீனாவின் முதலீடுகளை வரவேற்பதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தெரிவித்துள்ளார்.