மேலும்

Tag Archives: ரணில் விக்கிரமசிங்க

படை உயர்அதிகாரிகளுடன் அலரி மாளிகையில் ரணில் நடத்திய கூட்டம்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், சிறிலங்கா தொடர்பாக நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பாக, அலரி மாளிகையில், சிறிலங்காவின் முப்படைகளினதும், காவல்துறையினதும் உயர்மட்ட அதிகாரிகளை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

மகிந்தவைக் காப்பாற்றிவிட்டோம், படையினருக்கும் துரோகம் செய்யமாட்டோம் – ரணில் கூறுகிறார்

மகிந்த ராஜபக்சவை தூக்குக்கயிறில் இருந்து நாமே காப்பாற்றி விட்டோம், எந்தச் சந்தர்ப்பத்திலும் படையினருக்குத் துரோகம் இழைக்கமாட்டோம் என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

சிறிலங்காவின் கடற்றொழில் அமைச்சரைச் சந்திக்கிறது யாழ். மீனவர்கள் குழு

சிறிலங்கா மீனவர்களுக்கும் தமிழ்நாட்டு மீனவர்களுக்கும் இடையில் அண்மைய காலங்களில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ள நிலையில் இதற்குத் தீர்வு காணும் முயற்சியாக சிறிலங்காவின் கடற்றொழில் அமைச்சரை யாழ்ப்பாண மீனவர் சங்கப் பிரதிநிதிகள் நாளை சந்திக்கவுள்ளனர்.

சிறிலங்கா பிரதமருடன் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா பேச்சு

இந்தியாவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் இன்று காலை சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

புதுடெல்லியில் இன்று முக்கிய பேச்சுக்களில் ஈடுபடுகிறார் ரணில்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மூன்று நாள் பயணமாக நேற்று மாலை புதுடெல்லியைச் சென்றடைந்தார். புதுடெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தைச் சென்றடைந்த ரணில் விக்கிரமசிங்கவை, இந்திய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விரவேற்றார்.

உள்நாட்டு விசாரணைக்கு கூட்டமைப்பை இணங்க வைக்குமாறு மோடியிடம் கோருவார் ரணில்

போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பான உள்நாட்டு விசாரணைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இணங்க வைப்பதற்கு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆதரவு கோரவுள்ளார்.

அமைச்சர்களுக்கு ‘கால்கட்டு’ போட்டார் சிறிலங்கா பிரதமர் ரணில்

தேசிய அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் நாடாளுமன்ற அமர்வுகளின் போது, கட்டாயம் சமூகமளித்திருக்க வேண்டும் என்று கண்டிப்பாக அறிவுறுத்தியுள்ளார் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிட்டுமா?

கடந்த சில ஆண்டுகளாக சிறிலங்கா மீது விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என பல நாடுகள் அழுத்தம் கொடுத்து வந்துள்ளன. ஆனாலும் தற்போது சிறிசேனவின் உள்ளக விசாரணைக்கு ஆதரவு வழங்குவதென அமெரிக்கா அறிவித்ததானது தமிழ் மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பை உண்டாக்கியுள்ளது.

வரும் 15ஆம் நாள் புதுடெல்லி செல்கிறார் ரணில்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 15ஆம் நாள் புதுடெல்லிக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக புதுடெல்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்காவில் இனி என்ன?

ஊழல் மோசடிகள் தொடர்பான விசாரணைகள் இனிவருங் காலங்களில் எவ்வாறு தொடரப்படும்? தமிழர் பிரச்சினைகள் தொடர்ந்தும் பின்தங்கிய நிலையில் இருக்குமா? ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இடம்பெறவுள்ள கூட்டத் தொடரில் கொழும்பில் மூலோபாயம் என்ன?