மேலும்

Tag Archives: ரணில் விக்கிரமசிங்க

திணைக்கள அதிகாரிகளை அமைச்சர்கள் நியமிக்க முடியாது – மைத்திரி அதிரடி உத்தரவு

அரசாங்க நிறுவனங்களில் அதிகாரிகள் நியமனம் தொடர்பான முடிவுகள், குழுவொன்றினாலேயே மேற்கொள்ளப்படும் என்றும், அமைச்சர்கள் தன்னிச்சையாக நியமனங்களை மேற்கொள்ள முடியாது என்றும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.

முதல் உரையிலேயே அரசாங்கத்தை சாடிய எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன்

சிறிலங்கா நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக இன்று நியமிக்கப்பட்ட இரா.சம்பந்தன், தனது முதல் உரையிலேயே,  அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் சிறிலங்கா அரசாங்கத்தின் திட்டத்துக்கு எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகளை வைத்து முடிவெடுக்க கூடாது – அனைத்துலக இராஜதந்திரிகளிடம் சிறிலங்கா கோரிக்கை

அனைத்துலக சமூகம் சிறிலங்காவின் மனித உரிமைகள் விவகாரத்தில் மட்டும் கவனம் செலுத்தாமல், ஏனைய விடயங்களிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர.

தேசிய அரசாங்கத்தில் இணைகிறது ஈபிடிபி – டக்ளசுக்கு அமைச்சர் பதவி?

சிறிலங்காவில் அமையவிருக்கும் தேசிய அரசாங்கத்தில் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈபிடிபியும் இணைந்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளது.

27 அமைச்சர்கள் இன்று பதவியேற்பர்?

சிறிலங்காவின் புதிய அமைச்சரவையில் இடம்பெறும் 27 அமைச்சர்கள் இன்று பதவியேற்றுக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிபர் செயலகத்தில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்பாக இந்த பதவியேற்பு நிகழ்வு இடம்பெறும்.

ஐ.நா அறிக்கை குறித்து சிறிலங்காவுடன் முக்கிய பேச்சு நடத்துகிறார் நிஷா பிஸ்வால்

ஒரு நாள் பயணமாக நாளை சிறிலங்கா வரவுள்ள அமெரிக்காவின் தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால், ஐ.நாவின் போர்க்குற்ற விசாரணை அறிக்கை தொடர்பாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சருடன் பேச்சு நடத்துவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாய்ப்பை பயன்படுத்த வேண்டும் – ரணிலிடம் தொலைபேசியில் பான் கீ மூன்

சிறிலங்காவில் நிலையான அமைதியை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம், ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.

பதவி விலக மறுக்கும் சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் – மகிந்த தரப்புக்கு அதிர்ச்சி

மைத்திரிபால சிறிசேன – ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களை பதவி விலகச் செய்யும், மகிந்த தரப்பின் முயற்சிக்கு எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.

பிரதமர் பதவிக்கான போட்டியில் ரணிலிடம் தோற்கிறார் மகிந்த – கருத்துக் கணிப்பில் தகவல்

சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தலில், போட்டியிடும் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச, பிரதமராவதற்கு  வாக்காளர்களிடம் போதிய ஆதரவு இல்லை என்றும், ரணில் விக்கிரமசிங்கவை விடவும் பின்தங்கிய நிலையிலேயே அவர் இருப்பதாகவும் கருத்துக் கணிப்பு ஒன்றில் தெரியவந்திருக்கிறது.

அதிகாரப்பகிர்வு – ஒரே நாளில் குத்துக்கரணம் அடித்தது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி

ஆட்சியமைத்து ஆறு மாதங்களுக்குள்- 13வது திருத்தச்சட்டத்தின் கீழ் மாகாணங்களுக்கு அதிகாரங்களை அளித்து, தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதாக வாக்குறுதி அளித்திருந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஒரே நாளில் அந்த நிலைப்பாட்டில் இருந்து குத்துக்கரணம் அடித்துள்ளது.