மேலும்

பண்டா குடும்பம் மீது பழிபோடுகிறார் மகிந்த

mahinda-rajapaksaபோரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, கோத்தபாய ராஜபக்சவை தான் அறிமுகப்படுத்தியதாகவும், தனது சகோதரர்களான பசிலையும், சமலையும் மக்களே அரசியலுக்கு கொண்டு வந்ததாகவும் தெரிவித்துள்ளார் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச.

சிறிலங்கா அரசாங்கத்தில் ராஜபக்ச குடும்பத்தின் ஆதிக்கம் குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ள சூழலில், நேற்று நடந்த கூட்டம் ஒன்றில் உரையாற்றிய மகிந்த ராஜபக்ச,

“பசில் ராஜபக்ச 1977ம் ஆண்டு அரசியலுக்கு வந்திருந்தார்.

அவரை முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவும், முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கவும் தான், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழுவுக்கு நியமித்திருந்தனர்.

அதுபோல, சமல் ராஜபக்சவுக்கு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு முதன்முதலில் வாயப்பை வழங்கியதும், சிறிமாவா பண்டாரநாயக்க தான்.

அவர்களை நான் அரசியலுக்கு கொண்டு வரவில்லை. இவர்களை கட்சிக்குள் கொண்டு வந்தது, சிறிமாவோ பண்டாரநாயக்க தான்.

போரின் போது நான் கோத்தபாய ராஜபக்சவைக் கொண்டு வந்தேன். போருக்காகவே அவர் கொண்டு வரப்பட்டார்.

போரை நடத்தும் போது, பாதுகாப்புச் செயலர் பதவிக்கு நம்பிக்கைக்குரிய ஒருவரை நியமிக்க வேண்டிய தேவை இருந்தது.

அந்த வகையில் அவர் தனது கடமையை நன்றாகவே செய்திருக்கிறார்.

நாட்டை பின்நோக்கிச் செல்ல விடமுடியாது. வெளியில் இருப்பவர்களின் தாளத்துக்கு ஆடுவதற்கு நாம் தயாராக இல்லை.

நாம் மக்களின் மிது நம்பிக்கை வைத்துள்ளோம். தமது தலைவர்கள் குறித்து அவர்கள் மிகுந்த அறிவுடன் இருக்கிறார்கள்.

கடந்த காலங்களில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியை விட்டுச்சென்ற பொதுச்செயலர்கள் மீளவும் திரும்பி வந்திருக்கிறார்கள்.

அண்மையில் இடம்பெற்ற கட்சி தாவல்களுக்குக் காரணம் சந்திரிகா குமாரதுங்கவே” என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *