மேலும்

மகிந்தவை எதிர்க்கமாட்டேன் – பின்வாங்கினார் சரத் என் சில்வா

sarath n silvaமூன்றாவது தடவையும் அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ள சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக தான் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப் போவதில்லை என்று சிறிலங்காவின் முன்னாள் தலைமை நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார்.

மூன்றாவது தடவையும் அதிபர் தேர்தலில் போட்டியிட்டால், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக தான் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்பேன் என்று சரத் என் சில்வா முன்னர் கூறியிருந்தார்.

தற்போது அவர் தனது முடிவில் இருந்து பின்வாங்கியுள்ளார்.

“உயர்நீதிமன்றத்தின் கருத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மூன்றாவது தடவையும் மகிந்த ராஜபக்சவினால், போட்டியிட முடியும் என்ற அதன் கருத்து சட்டவிரோதமானது.

அதே நீதிமன்றத்திடம் முறையீடு செய்து பயனில்லை என்று உணர்கிறேன்.”  என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அண்மையில், தான் யாழ்ப்பாணம் சென்று, காங்கேசன்துறைக் கடற்படைத் தளத்தில் தங்கியிருந்ததாக ஊடகங்களில் வெளியான செய்திகளையும் சரத் என் சில்வா நிராகரித்துள்ளார்.

எனினும், பாதுகாப்பு அமைச்சு அதனை உறுதிப்படுத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *