மேலும்

அரசியல் துறவறத்தை முடித்தார் சந்திரிகா – மைத்திரிபாலவை தலைவராக்குவேன் எனச் சூளுரை

மைத்திரிபால சிறிசேனவை சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக்குவேன். அதுவரை இந்தப் போராட்டம் ஓயாது என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க சூளுரைத்துள்ளார்.

மற்றொரு ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஐதேகவில் இணைவு

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரான பெருமாள் இராஜதுரை சற்று முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளார்.

சிறிலங்காவில் ஜனவரி 8ம் நாள் அதிபர் தேர்தல் – முறைப்படி அறிவிப்பு.

சிறிலங்காவில் அதிபர் தேர்தல் வரும் ஜனவரி மாதம் 8ம் நாள் நடைபெறும் என்று தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய இன்று மாலையில் அறிவித்துள்ளார்.

மைத்திரிபால உள்ளிட்ட 3 அமைச்சர்களை பதவிநீக்கினார் மகிந்த

எதிரணியின் பொது வேட்பாளராகப் போட்டியிடவுள்ள மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட மூன்று அமைச்சர்களை சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச உடனடியாகப் பதவியில் இருந்து நீக்கியுள்ளார்.

போர் தொடங்கி விட்டது – ராஜித சேனாரத்ன

நிறைவேற்று அதிகாரத்துக்கு எதிரான போர் தொடங்கி விட்டது என்று மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் இருந்து விலகியுள்ள அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

மகிந்தவை எதிர்க்கும் பொதுவேட்பாளர் நானே! – அறிவித்தார் மைத்திரிபால

எதிரணியின் சார்பில் சிறிலங்கா அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சவை எதிர்த்து பொது வேட்பாளராக தான் போட்டியிடவுள்ளதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். ( 3ம் இணைப்பு)

இந்தியா: ‘மத்திய அரசாங்கத்திற்கும் – மாநிலங்களுக்கும்’ இடையேயான உறவில் மாற்றம் வேண்டும் – ஆய்வாளர்

புலம்பெயர்ந்த தமிழர் அதிகம் வாழும் நாடுகளுக்கு நியமிக்கப்படும் இந்தியத் தூதுவர்கள் தனது மாநிலத்திலிருந்து தெரிவு செய்யப்பட வேண்டும் என தமிழ்நாடானது நீண்டகாலமாகக் கோரிவருகிறது. இதன்மூலம் தமிழ்நாடானது இந்திய மத்திய அரசாங்கத்தில் பூகோள-மூலோபாய அதிகார பலம்பொருந்திய மாநிலமாக உருவாக முடியும்.

அலரி மாளிகையில் அவசர கூட்டம் – மகிந்த ராஜபக்ச அழைப்பு

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான அவசர கூட்டம் ஒன்றுக்கு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார்.

அமெரிக்கத் தூதுவர் சிசன் ஐ.நாவுக்கான பிரதி தூதுவராகிறார் – செனட் அங்கீகாரம்

சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே சிசன் ஐ.நாவுக்கான அமெரிக்காவின் பிரதி தூதுவராகப் பொறுப்பேற்கவுள்ளார்.

ஊடகங்களைச் சந்திக்கிறார் மைத்திரிபால – கொழும்பு நகர மண்டபத்தில் குவிந்துள்ள செய்தியாளர்கள்

சிறிலங்கா அதிபர் தேர்தலில் எதிரணியின் பொதுவேட்பாளராகப் போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்படும், மைத்திரிபால சிறிசேன கொழும்பில் சற்றுநேரத்தில் செய்தியாளர்களைச் சந்திக்கவுள்ளார்.