மயூரன் உள்ளிட்ட எட்டுப் பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றியது இந்தோனேசியா
அவுஸ்ரேலியக் குடியுரிமை பெற்ற இலங்கை வம்சாவளித் தமிழரான மயூரன் சுகுமாரன் உள்ளிட்ட எட்டுப் பேருக்கு, இந்தோனேசியாவில் நேற்று நள்ளிரவு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
அவுஸ்ரேலியக் குடியுரிமை பெற்ற இலங்கை வம்சாவளித் தமிழரான மயூரன் சுகுமாரன் உள்ளிட்ட எட்டுப் பேருக்கு, இந்தோனேசியாவில் நேற்று நள்ளிரவு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, 19வது திருத்தச்சட்டத்தை நிறைவேற்றுவதற்காக நேற்று முழுநாளும் நாடாளுமன்றத்திலேயே தங்கியிருந்தார்.
சிறிலங்காவின் 19வது திருத்தச்சட்டத்தில், அரசியலமைப்பு சபைக்கு உறுப்பினர்களை நியமிக்கும் விடயத்திலேயே நேற்று கடைசிநேரம் வரை இழுபறி காணப்பட்டது. எனினும், பிடிவாதமாக இருந்த ஐதேகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் கடைசியில் இறங்கி வரவேண்டிய நிலை ஏற்பட்டது.
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்றிரவு நடந்த குழுநிலை விவாதங்களுக்குப் பின்னர், 19வது திருத்தச்சட்டத்தின் மூன்றாவது வாசிப்பு, மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது.
பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த சிறிலங்கா அரசியலமைப்பின் 19வது திருத்தச் சட்டம் சற்று முன்னர், 215 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
சிறிலங்காவில் பெரும் பரபரப்பான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள, நாடாளுமன்றத்தில் 19வது திருத்தச்சட்டம் மீதான வாக்கெடுப்பு ஒரு மணிநேரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொடவின் செயற்பாடுகள் தொடர்பாக எதிர்காலத்தில் பல ஆதாரங்கள் வெளிப்படுத்தப்படும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
19வது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான ஆளும்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையில் ஏற்பட்டுள்ள இழுபறிகளைத் தீருக்கும் கடைசி நேர முயற்சியில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்காவின் மனித உரிமை மீறல்கள் குறித்த அமெரிக்காவின் நீண்டகால கரிசனைகள் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்த விசாரணைகளை, சிறிலங்காவிடம் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி வலியுறுத்துவார் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேபாளத்தில் நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிப் பொருட்களையும், மீட்புப் பணியில் ஈடுபடுவதற்கான படையினர் மற்றும் மருத்துவர்களையும் ஏற்றிச் சென்ற சிறிலங்கா விமானப்படை விமானம், திருத்தப்பட்டு கொழும்பு நோக்கிப் புறப்பட்டுள்ளதாக பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.