அனைத்துலக ஆலோசனைக்குழுவுக்கு ஜப்பானிய நிபுணர் நியமனம்
வடக்கு, கிழக்கில் போர் இடம்பெற்ற காலத்தில் காணாமற்போனோர் குறித்து விசாரிக்கும் சிறிலங்கா அதிபர் ஆணைக்குழுவுக்கு ஜப்பானிய நிபுணர் ஒருவர் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வடக்கு, கிழக்கில் போர் இடம்பெற்ற காலத்தில் காணாமற்போனோர் குறித்து விசாரிக்கும் சிறிலங்கா அதிபர் ஆணைக்குழுவுக்கு ஜப்பானிய நிபுணர் ஒருவர் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போதைய சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவும் அவரது சக்திமிக்க சகோதரர்களும் ஆட்சி அதிகாரத்தை விட்டு வெளியேறுவதில் எதிர்ப்பைக் காண்பிக்கலாம் என்கின்ற அச்சம் அதிகரித்து வருவதாக அனைத்துலக நெருக்கடிகள் குழுவின் சிறிலங்காவுக்கான ஆய்வாளர் அலன் கீன் தனது நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் இருந்து செயற்படும் – சிறிலங்கா குறித்த செய்திகளை வெளியிடும் இணையத்தளங்களை அடையாளம் காணும் முயற்சியில் சிறிலங்கா அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தலை உறுதியாக வெளிப்படுத்த வேண்டும் என்று அனைத்துலக மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் தங்கியுள்ள இலங்கை அகதிகளை அவர்களின் தாயகத்துக்கு திருப்பி அனுப்புவது தொடர்பான ஆய்வு ஒன்றை மேற்கொள்ள இந்திய மத்திய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
அதிபர் தேர்தலில் தாம் தோல்வியுற்றால், எந்த தயக்கமும் இன்றி அதிகாரத்தை ஒப்படைத்து விடுவேன் என்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச கத்தோலிக்கத் திருச்சபைக்கு வாக்குறுதி அளித்துள்ளார்.
அடுத்த மாதம் நடக்கவுள்ள அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சவுக்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், இதொகாவுக்குள் பிளவு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
போர் முடிவுக்கு வந்த பின்னர் யாழ்ப்பாணத்தில் குற்றச்செயல்கள் அதிகரித்திருப்பது குறித்து நிபுணர்கள் கவலையடைந்துள்ளனர். சட்டத்தை மதிக்கும் குடிமக்கள் என்று அறியப்பட்ட இடம், இன்று குற்றவாளிகளும், சட்டத்தை மீறுவோரும் மகிழ்ச்சியாக வேட்டையாடும் இடமாக மாறியுள்ளது.
முல்லைத்தீவின் 1000 ஏக்கர் பரப்பைக் கொண்ட Pansal Kanda என்கின்ற காட்டுப்பகுதி துப்பரவு செய்யப்பட்டு 25 ஏக்கர் நிலப்பரப்பாகப் பிரிக்கப்பட்டு செல்வாக்கு மிக்க அரசியல்வாதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
கொழும்புக்கு அருகே இன்று காலை இடம்பெற்ற விமான விபத்தில், நான்கு சிறிலங்கா விமானப்படை அதிகாரிகள் உயிரிழந்த நிலையில், இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன், அன்ரனோவ் விமானங்கள் பறப்பதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.