மேலும்

நேபாளத்தில் பழுதடைந்திருந்த சிறிலங்காவின் இராட்சத விமானம் – கொழும்பு நோக்கிப் புறப்பட்டது

நேபாளத்தில் நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிப் பொருட்களையும், மீட்புப் பணியில் ஈடுபடுவதற்கான படையினர் மற்றும் மருத்துவர்களையும் ஏற்றிச் சென்ற சிறிலங்கா விமானப்படை விமானம், திருத்தப்பட்டு கொழும்பு நோக்கிப் புறப்பட்டுள்ளதாக பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சி-130 இராட்சத போக்குவரத்து விமானம் கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் காத்மண்டுவைச் சென்றடைந்த நிலையில், அதில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டது.

அதனைச் சரிசெய்யும் முயற்சிகள் இன்னமும் முடியாததால், கொழும்பு திரும்புவதில் பிரச்சினை ஏற்பட்டது.

இதனால், நேபாளத்தில் சிக்கியுள்ள இலங்கை மாணவர்களை மீட்டு வரும் பணி தாமதமாகிய து. இந்த விமானத்தில், 33 மாணவர்களை அழைத்து வர ஏற்பாடாகியிருந்தது.

இதுகுறித்து கருத்து வெளியிட்ட சிறிலங்கா விமானப்படைப் பேச்சாளர், விங்கொமாண்டர், கிகான் செனிவிரத்ன, இந்த விமானம் பெரும்பாலும் குறுகிய தூரப் பயணங்களுக்கே பயன்படுத்தப்பட்டு வந்தது என்றும்,  நீண்ட தூரப் பயணத்தை மேற்கொண்டதால், பழுது ஏற்பட்டிருக்கலாம் என்றும் குறிப்பிட்டார்.

எண்ணெய்க் கசிவு ஏற்பட்டிருக்கலாம் என்று நினைக்கிறோம், இது எந்த விமானத்திலும் ஏற்படுகின்ற பிரச்சினை தான் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

உதிரிப்பாகங்கள் மற்றும் தொழில்நுட்ப உதவிகள் என்பன கிடைப்பதைக் கொண்டே, திருத்தப் பணிகளுக்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்பதை உறுதிப்படுத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

சிறிலங்கா விமானப்படையிடம் இரண்டு சி-130 விமானங்கள் உள்ளன. இவற்றில் ஒன்றே நேபாளத்தில் சிக்கியிருந்தது. மற்ற விமானம், நீண்டகால சேவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

விமானத்தைப் பழுதுபார்க்கும் பணிகள் தொடர்வதால், 33 இலங்கையர்களும், சிறிலங்கா தூதரகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

இந்த நெருக்கடியால், சிறிலங்காவில் இருந்து இரண்டாவது மீட்பு அணியை அனுப்புவது மற்றும் உதவிப் பொருட்களை அனுப்புவதும் தாமதமடைந்துள்ளது.

இந்தநிலையில், நேபாளத்தில் பழுதடைந்திருந்த சிறிலங்கா விமானப்படை விமானம், திருத்தப்பட்டு, காத்மண்டுவில் இருந்து இன்று காலை 8.45 மணியளவில் கொழும்பு நோக்கிப் புறப்பட்டுள்ளதாக சிறிலங்கா விமானப்படை தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த விமானத்திரல் 42 இலங்கையர்கள் ஏற்றி வரப்படுவதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விமானம் இன்று பிற்பகல் 2 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை் வந்தடைந்துள்ளதாக சிறிலங்கா விமானப்படைப் பேச்சாளர் அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *